சும்மா.. கிரிக்கெட் வீரனாக நடிக்க முடியாது.. அதற்கும் பயிற்சி வேண்டும்..! டெஸ்ட் பட நடிகர் சித்தார்த் ஆவேசப் பேச்சு..!
கிரிக்கெட் வீரனாக நடிப்பது சாதாரணமான காரியம் அல்ல என ஆவேசப் பேசி இருக்கிறார் நடிகர் சித்தார்த்.
தன்னை யாரும் இனி "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என கூறி பல நெட்டிசன்களின் வசைபாடுதலுக்கு ஆளான நடிகை நயன்தாரா, தற்பொழுது திரையரங்குக்கே வராமல், நேரடியாகா ஓடிடியில் வெளியாகும் படத்தில் நடித்து திரையரங்கு உரிமையாளர்களின் வசைப்பாடுதலுக்கு ஆளாகியுள்ளார்.
நயன்தாராவின் படம் திரைக்கே வராமல் ஓடிடியில் வெளியாகிறது என கேள்வி பட்டவுடன் ரசிகர்கள் முதலில் சந்தோஷத்தால் ஆட்டம் போட்டாலும் பிறகு என்ன நயன்தாரா, நடிகர் சூர்யா நடித்து வெளியான "ஜெய் பீம்" பேட்டனை காஃபி அடிக்கிறிங்களா என ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
என்ன நடந்தாலும் சரி... திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டமே நடத்தினாலும் சரி...அதனை பற்றின கவலை எனக்கு இல்லை கண்டிப்பாக இந்த படத்தை வெளியிடுவோம் என அப்பொழுது நடிகர் சூர்யா கூறி வெளியிட்ட படம் தான் "ஜெய் பீம்". இருளர் இன மக்களின் உண்மை வாழ்க்கையை மிகவும் தத்துரூபமாக எடுத்து ஜனாதிபதி முதல் முதலமைச்சர் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இப்படத்தின் இயக்குனர். பின்பு இப்படத்தால் பல பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரமே மாறியுள்ளது என கூறலாம்.
இப்படி பட்ட படம் ஓடிடி தளமான "அமேசான் ஃபிரைமில்" வெளியானது.
இதையும் படிங்க: சல்மான் கானை பற்றி ராஷ்மிகா சொன்ன விஷயம்.. ஒரே வார்த்தையில் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகை..!
நீங்கள் 'அமேசான் ஃபிரைமில்' வெளியிட்டால் நாங்கள் எங்கள் படத்தை 'நெட்பிளிக்ஸில்' வெளியிடுவோம் என சூர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கியிருக்கிறார் நடிகை நயன்தாரா. அதற்கு சாட்சியாக, லேடி சூப்பர் ஸ்டார் என முன்பு அழைக்கப்பட்ட நயன்தாரா தற்பொழுது "டெஸ்ட்" என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட்.
இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஜெய் பீம் படத்தைப் போன்று netflix-ல் ஏப்ரல் 4-காம் தேதி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் நடிகர் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்தநிலையில், டெஸ்ட் படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் நடிகர் மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நடிகை நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பதால், அங்கு ஏன்..? நயன்தாரா நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற கேள்வி எழும்பி சர்ச்சையானது. ஆனால் அவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லை என சாதுர்யமாக பதிலளித்து சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் படக்குழுவினர்.
இதனை தொடர்ந்து, படத்தில் தனது கேரக்டரை குறித்து பேசிய நடிகர் சித்தார்த், "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுது போக்காக இல்லாமல் வாழ்க்கையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் பெரும் வெற்றி நம் வெற்றியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் பெருகியுள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் அதில் ஒருவன் தான். நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன்.
ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்தவர்கள் என்று பார்த்தால் என்றும் 'ராகுல் டிராவிட்' தான், என கூறினார்.
இதையும் படிங்க: ஆர்யா சந்தானம் கூட்டணியில் பார்ட் 2...! இயக்குனர், தயாரிப்பாளர் கொடுத்த மறைமுக அப்டேட்..!