தீராத வியாதியால் பாதிப்பு.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நஸ்ரியா..!
நடிகை நஸ்ரியா தனக்கு உடல் நிலையில் பிரச்சனை இருப்பதாக கூறி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாது அனைத்து திரையுலகிலும் குட்டி ஜெனிலியாவாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை நஸ்ரியா. இவரது நடிப்புகளை விட அவரது முகபாவனைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவரது நடிப்பில் வெளியான படங்களில் நடிகர் ஆர்யா, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நடித்த படமான "ராஜா ராணி" படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் 'ஃபிரதர்' என்று அழைத்து ஆர்யாவை காதலிக்க செய்வார். அவரது அழுகை புன்னகை என அனைத்தும் பார்ப்பவர்களை மிரளவைப்பதாகவே இருக்கும்.
நடிகை நஸ்ரியா மலையாள நடிகை ஆவார். இவர் ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிஹ்கா போன்ற சில படங்களில் நடித்த பின் பெரிய அளவுக்கு சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வந்த வேகத்திலேயே குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்தார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இனி நடிக்கமாட்டார் என பேச்சு அடிப்பட்டது. அத்துடன் திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் கிண்டலடிக்க மீண்டும் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
இதையும் படிங்க: "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்"..! கிளாமர் போட்டோவில் அசத்தும் மிருனாள் தாகூர்..!
நடிகை நஸ்ரியா இதுவரை, இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் வெளியான "நேரம்" என்ற திரைப்படத்திலும், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான "நய்யாண்டி" திரைப்படத்திலும், இயக்குனர் அட்லி குமார் இயக்கத்தில் வெளியான "ராஜா ராணி" திரைப்படத்திலும், இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" திரைப்படத்திலும், பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான "வாயை மூடி பேசவும்" திரைப்படத்திலும், அனீஸ் இயக்கத்தில் வெளியான "திருமணம் என்னும் நிக்காஹ்" திரைப்படத்திலும், விவேக் அத்ரேய இயக்கத்தில் வெளியான அடடே சுந்தரா திரைப்படத்திலும் நடித்துள்ள இவர் அதற்கு மேல் பெரியதாக படத்தில் நடிக்கவில்லை. இந்த சூழலில் நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆனது ஏன்? பல நாட்களாக எந்த படங்களிலும் பெரியதாக நடிப்பதில்லை. சமூக வலைத்தளங்களிலும் பெரியதாக ஆக்டிவாக இல்லை என ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதனை அறிந்த நடிகை நஸ்ரியா, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருவதை குறித்து பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
உங்களில் பலருக்குத் தெரியும், நான் எப்போதும் இந்த அற்புதமான சோஷியல் மீடியாவில் தீவிரமாக இயங்கி வந்தேன். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, எனது உடல்நிலை சிக்கல் மற்றும் தனிப்பட்ட சவால்களால் தொடர்ந்து போராடி வருகிறேன். இவை எல்லோருடனும் உள்ள தொடர்பில் இருந்து என்னை விளக்கி வைத்துள்ளது.
உண்மையில் எனது 30வது பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம், எனது நடிப்பில் வெளியான 'சூக்ஷமதர்ஷினி' திரைப்படத்தின் வெற்றி, மற்றும் பல முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் நிகழ்வை நான் தவறவிட்டேன். நான் ஏன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தேன் என்பதை விளக்காததற்கும், நீங்கள் விடுத்த அழைப்புகளுக்கும் பதிவுகளுக்கும் பதிலளிக்காததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய சிரமத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். அதுமட்டுமல்லாமல் நான் முழுமையாக வெளியுலகை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.
வேலைக்காக என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்த எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இல்லாததால் ஏற்பட்ட இடையூறுகளுக்கும் வருந்துகிறேன். நான் முழுவதுமாக குணமாக இன்னும் சில காலம் ஆகும். இருப்பினும் நாளுக்கு நாள் சீராக குணமடைந்து வருகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்ப எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம், ஆனால் நான் மீள்வதற்கான பாதையை நெருங்கி இருக்கிறேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்... விரைவில் மீண்டும் உங்களுடன் இணைகிறேன். உங்கள் முடிவில்லாத ஆதரவிற்கு நன்றி” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'குட், பேட், அக்லி' பாடல் சர்ச்சை.. இளையராஜா எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்.. இயக்குநர் சி.எஸ். அமுதன் நெகிழ்ச்சி!