ஒரே படம்.. நடுத்தெருவுல நானும் எனது கணவரும்.. ரொம்ப அசிங்கமா போச்சி.. நீலிமா ராணி பகீர்...!
ஒரே படம் எடுத்து மொத்த சொத்துக்களையும் இழந்துள்ளார் நடிகை நீலிமா ராணி.
1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா ராணி, அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுவரை நீலிமா ராணி ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைகாட்சித் தொடர்களிலும் முப்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், "நான் மகான் இல்லை" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். இவரது படங்களில் இவரது ரியாக்ஷனும் இவரது ஆக்ஷனும் பார்ப்பவர்களை மெய்மறக்க செய்திவிடும். அந்த அளவிற்கு அவரது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார் நிலா ராணி.
இதுவரை, "ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் தம் என்ற திரைப்படத்திலும், கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் பிரியசகி, சரண் இயக்கத்தில் இதயதிருடன், ராதா மோகன் இயக்கத்தில் மொழி, எம் ராஜா இயக்கத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ராஜாதி ராஜா, மித்திரன் ஜவகர் இயக்கத்தில் குட்டி, சுசீந்திரன் இயக்கத்தில் நான் மகான் அல்ல, ராஜன் மாதவ் இயக்கத்தில் முரண், மிஸ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அருண் குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சாய் கோகுல் ராமநாத் இயக்கத்தில் வாலிப ராஜா, அறிவழகன் இயக்கத்தில் குற்றம், பூபதி பாண்டியன் இயக்கத்தில் மன்னர் வகையறா, செல்வேந்திரன் இயக்கத்தில் கரும்பங்காட்டு வலசு, எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா, என் எஸ் பொன்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947" முதலிய படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!
அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.இவரது சிறந்த கதாப்பாத்திரமாக வெள்ளித்திரையில் பார்க்கும் பொழுது "மொழி" திரைப்படத்தில் அவர் வரும் காட்சிகள். அதன் பின் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் சந்தானத்திற்கு மனைவியாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருப்பார்.
இப்படி இருக்க, ஒரு படம் எடுக்க நினைத்து மொத்த சொத்துக்களையும் இழந்தோம் என நிலீமா ராணி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், முன்னொரு காலத்தில் நானும் என் கணவரும் இணைந்து ரூ.4 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்து, ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி அப்படத்தை தயார் செய்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததை போல் அந்த படம் சரியாக அமையவுமில்லை, ஒழுங்காக வரவுமில்லை. ஆதலால் அந்த படம் திரைக்கு வராமல் குப்பைக்கு சென்றது. அதோடு சேர்ந்து வாங்கிய கடனுக்காக குப்பையில் தூக்கி எரிவதை போல ஒரு நொடியில் எல்லாவற்றையும் இழந்து நானும் என் கணவரும் நடுத்தெருவுக்கு வந்து குப்பையோடு குப்பையாக நின்றோம்.
எங்களை பலரும் கேலி செய்தனர். ஆனால் அதனை நாங்கள் சகித்து கொண்டு அடுத்த பயணத்தை எடுத்து வைக்கலாமா என்று பார்த்தால் எங்களிடம் வாடகை வீட்டில் தங்க கூட பணமில்லாமல் போனது. ஆதலால் நானும் எனது கணவரும் அவரது நண்பர் விட்டில் ஒரு அறையில் தங்கி இருந்தோம். எப்படியாவது இழந்ததை எல்லாம் பெற வேண்டும் என நினைத்து மீண்டும் சின்னத்திரையில் வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க துவங்கினேன். காலம் போக.. போக... எங்களுக்கு தொழில் ரீதியான அறிவும் வளர்ந்தது.
இந்த முறை சரியாக வாய்ப்பை பயன்படுத்த நினைத்து 2017ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை, நிறைமாறாத பூக்கள் போன்ற சீரியல்களை நானும் எனது கணவரும் தயாரித்தோம். இன்று நாங்கள் வெள்ளித்திரையில் விட்டத்தை சின்னத்திரையில் பிடித்து இழந்த எல்லாவற்றையும் மீட்டு இருக்கிறோம். ஆனால் எங்கள் பலநாள் கனவான வெள்ளித்திரை கனவை கண்டிப்பாக ஒருநாள் நிறைவேற்றியே தீருவோம் என்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை நீலிமா ராணி சுமந்து இருக்கிறார் என்பது அவர் சொல்லி தான் தெரிகிறது என்றும் இழந்தவைகளை திரும்பி பெற போராடும் முயற்சி தான் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி என நெட்டிசங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களின் கோஷம்.. நடிகர் போட்ட வேஷம்..! அரங்கத்தையே அலற விட்ட மணிகண்டன்!!