×
 

பிரபாஸுடன் இணையும் மக்கள் செல்வன்..! கல்கி படத்திற்கு பின் உருவாகியுள்ள பிரம்மாண்ட கூட்டணி...!

ரசிகர்களை கொண்டாட்டம் அடைய சேயும் அளவிற்கு மூன்று ட்ரிட்களை கொடுத்து இருக்கிறார் நடிகர் பிரபாஸ்.

கேஜிஎப் படத்தில் வரும் டயலாக்கை போல " யாரோ பத்து பேரை அடித்து டான் ஆனவன் இல்லை நான்... நான் அடிச்ச பத்துபேருமே டானுங்க தான்" என்பது போலா, தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை பிரபாஸை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு "யாரோ பத்து பேரு கூட போட்டி போட்டு ஹீரோ ஆணவரு இல்ல பிரபாஸ் அவரு மோதிய பத்து பேருமே பெரிய ஹோரோக்கள் தான்" என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். அப்படி பெயர் வரும் அளவிற்கு அவர் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் நடிக்கும் வரை மக்கள் மனதில் ஹீரோவாக இருந்த பிரபாஸ் இப்படத்திற்கு பிறகு மக்கள் மனதில் ராஜாவாக மாறினார். 

பாகுபலி ஒன்றாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பிறகு இப்படிப்பட்ட பிரமாண்டமான கதை பிரபாஸுக்கு அமையவில்லையே என அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஏன்..? ராஜமௌலி எதுவும் பேசாமால் இருக்கிறார் என காத்துகொண்டு இருந்தனர். பின் அடுத்தடுத்து ராஜமௌலி பிசியாக இருப்பதை பார்த்த ரசிகர்களது பார்வை அப்படியே "பிரஷாந்த் நீல்" பக்கம் திரும்பியது. பின் இவரது இயக்கத்தில் 'பிரபாஸ்' நடித்தால் அட்டகாசமான படம் ஒன்று கண்டிப்பாக கிடைக்கும் எனவும் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க: புஷ்பா பட ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பவர் அல்லு அர்ஜுன் இல்லை..! இயக்குனர் பளிச் பேச்சு..!

அந்த வகையில், எல்லோரும் எதிர்பார்த்தபடி "சலார்" என்ற பெயரில் பிரபாஸ் படம் வெளியானது. அப்படத்தின் கதையம்சத்தை பார்க்கும் பொழுது, படத்தின் தொடக்கத்தில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) வருகிறார். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு கும்பல் அவரை கடத்தி செல்ல முயல, தேவா (பிரபாஸ்) மட்டுமே உதவ முடியும் என்ற சூழ்நிலையில் அவரிடம் உதவி கேட்கப்படுகிறது.

பின் உதவ முன்வந்த தேவா, ஆத்யாவை (ஸ்ருதி ஹாசன்) அசாமில் உள்ள டின் சுகியா எனும் கிராமத்தில் தனது தாயின் கட்டுப்பாட்டில் வைக்கிறார். இப்படி இருக்க, ஆத்யாவை கண்டுபிடித்த கும்பல் தேவாவையும் கண்டு பிடிக்கின்றனர். பின்பு கான்ஸாரில் இரண்டு நண்பர்களின் கதைகளை காண்பித்து, தேவாவின் நண்பனான வரதராஜ மன்னாருக்கு எப்படி அரியாசனம் கிடைக்கும் என்பதை இரண்டாம் பாகத்தில் காணலாம் என படத்தை முடித்து இருந்தனர். இப்படத்தை பார்த்த சிலர் "படத்தில் பில்டப் இல்லை..பில்டப்பில் தான் படமே" என்றெல்லாம் கூறினர்.

ஆனாலும் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என பலரும் ஆவலுடன் ஏதிர்பார்த்து காத்து கொண்டு இருக்க, சலார் 2 திரைப்படத்தை பிரபாஸ் தற்போதைக்கு நடிக்க முடியாது என தள்ளிவைத்து இருக்கிறார் எனவும் காரணம், சலார் படத்திற்கு முன், ஹனு-மான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதால், அவர் படத்தில் நடித்த பின்பு "சலார் 2"வில் நடிப்பதாக கூறியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை சோகமாகியது. 

ஆனால், தற்பொழுது தமிழ் ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி நடிகர் பிரபாஸ் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கிறது அதன்படி, பிரபாஸின் 25வது படத்தை அனிமல் பட இயக்குனரான 'சந்தீப் ரெட்டி' இயக்க இருக்கிறார். "ஸ்பிரிட்" என பெயரிடபட்டுள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். இப்படி இரண்டு ட்ரீட்கள் இப்படத்தில் இருக்க, இப்படத்தில் மூன்றாவது ட்ரீட்டாக தமிழ் நடிகர் இருவர் இணைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வேறுயாருமில்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். 

இதனை கண்ட ரசிகர்கள் கண்டிப்பாக "கல்கி 2898 ஏடி" படத்தில் பிரபாஸுடன் நடித்தது போல் இப்படத்திலும் மக்கள் செல்வன் கலக்குவார் என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விடுதலை 2 படத்திற்கு வந்த புது ஆஃபர்... உச்சக்கட்ட குஷியில் வெற்றிமாறன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share