மகனுக்காக ஏழுமலையானை தரிசிக்க சென்ற பிரபுதேவா..! போட்டோ எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!
நடிகர் பிரபுதேவா தனது மகனுக்காவும் குடும்பத்திற்காகவும் ஏழுமலையானை சந்திக்க பக்தி பரவசத்துடன் சென்று இருக்கிறார்.
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் பிரபுதேவா. எப்படி, "தான் ஆட விட்டாலும் தன் தசை ஆடும்" என்பார்களோ அதற்கு ஏற்றார் போல் இவர் ஆடாவிட்டாலும் இவரது கை கால்கள் ஆடிக்கொண்டே தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவருடன் சேர்ந்து இவரது மகனும் ஆடுவதில் பின்னி பெடலெடுத்து வருகிறார்.
மைசூரில் 1973ம் ஆண்டு புறந்த பிரபு தேவா, சிலபல பிரச்சனைகளின் காரணமாக சென்னையின் ஆழ்வார்பேட்டையில் வளர்ந்தார். இப்படி இருக்க, இவரது தந்தையான சுந்தரம் பிரபலமான தென்னிந்திய திரைப்படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்ததை பார்த்து வளர்ந்த இவருக்கும் நடனம் மீது மிகுந்த ஆர்வம் வந்தது. இதனால் சிறுவயதிலிருந்து பரதநாட்டியம் மற்றும் மேற்கத்திய நடன பாணிகளைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி நடனத்தில் அனைத்து வித்தைகளையும் கற்று தேறினார்.
இதையும் படிங்க: வெச்ச குறி தப்பல.. நடனத்தில் அப்படியே அப்பா போல... பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்த மகன்..!
பின்பு தமிழ் திரையுலகில் "வெற்றி விழா" என்ற திரைப்படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமானார் பிரபுதேவா, இவரது நடன திறமைகள் பல இயக்குனர்களையும், பல நடிகர் நடிகைகளையும் ஈர்த்ததால், படத்தில் நடனம் என்றால் கற்றுக்கொடுக்க 'மாஸ்டர் பிரபுதேவா' தான் வரவேண்டும் என்ற அளவிற்கு மாறியது.
அப்படியே 100 படங்களுக்கும் மேலாக நடனத்தை இயக்கி கொடுத்த பிரபுதேவாவின் முக அமைப்பு மற்றும் அசைவுகளை கண்ட இயக்குனர்கள் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பினர். இயக்குநர்களின் விருப்பத்தை நிறைவேற்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபுதேவா கதாநாயகனாக நடிகை நக்மாவுடன் 'காதலன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இவர் எப்படி தற்பொழுது நடன இயக்குனர், நடிகர், பட இயக்குனர் என பல அவதாரங்களை எப்படி பிரபுதேவா தன் வசம் வைத்திருக்கிறாரோ அவரை போலவே அவரது சகோதரர்கள் ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தென்னிந்திய நடன இயக்குனர்களாக இருக்கின்றனர்.
இப்படி இருக்க இதுவரை பிரபு தேவா, இதயம், காதலன், ராசய்யா, மின்சார கனவு, காதலா காதலா, நாம் இருவர் நமக்கு இருவர், நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே, சார்லி சாப்ளின், 123, அலாவுதீன், எங்கள் அண்ணா, தோனி, உருமி, ABCD: ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ், களவாடிய பொழுதுகள், லட்சுமி, குலேபகாவலி, மெர்க்குரி, சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, தேள், பஹிரா, ஊமை விழிகள், பேட்ட ராப், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), எங் மங் சங், ஃப்ளாஷ் பேக், ஜாலி ஓ ஜிம்கானா, உல்ஃப், சிங்காநல்லூர் சிக்னல் முதலிய படங்களில் நடித்து இருக்கிறார் நடிகர் பிரபுதேவா.
இந்த நிலையில், தன் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வந்த பிரபுதேவா இப்பொழுது எல்லாம் மறைந்து சந்தோஷமாக இருக்கிறார். தனது கான்சட்டில் முதல் முறையாக அவரது மகனையும் நடனம் ஆட வைத்தார். இதில் அவரது மகனுக்கு நிறைய திருஷ்டி இருப்பதால் அதனை கழிக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவரது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் பிரபுதேவா. மேலும் அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!