×
 

சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்னேகா, பிரசன்னா...! மக்களுடன் பேசி மகிழ்ந்து வழிபாடு..!

தமிழில் மிகவும் பிரபலமான ஸ்னேகா மற்றும் பிரசன்னா இருவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" என்ற பாடலையும் "பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற பாடலையும் இன்று கேட்டாலும் அனைவரது நினைவிற்கு உடனே வருபவர் நடிகை ஸ்னேகா. நம் அனைவருக்கும் சினேகா என்று அறியப்படும் இவரது உண்மையான பெயர் "சுகாசினி இராசாராம் நாயுடு". இன்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்னேகாவின் ஆரம்ப திரையுலக வாழ்க்கை மலையாள படத்தில் தோன்றியது.

கடந்த 2001ம் ஆண்டு "இங்கே ஒரு நீலப்பக்சி" என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் குடும்ப பாங்கான இவரது முகத்தையும் நடிப்பையும் பார்த்த இயக்குனர்கள் இவரை தமிழில் வைத்து படம் இயக்க முடிவு செய்தனர். அதற்கு அச்சாணியாக, 2001ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற திரைப்படம் அமைந்தது. அதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஸ்னேகா. இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார். 

இதையும் படிங்க: என் ஹார்ட் ட்ரைவ்-ஐ திருப்பிக் கொடுங்கள்.. பெப்ஸி அலுவலகத்தில் நடிகை சோனா திடீர் உண்ணாவிரதம்..!

இதுவரை என்னவளே, பார்த்தாலே பரவசம், பம்மல் கே. சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, கிங், வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஜனா, ஆட்டோகிராஃப், சின்னா, புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம், இன்பா,  பாண்டி, சிலம்பாட்டம், தீராத விளையாட்டுப் பிள்ளை, அங்காடித் தெரு, கோவா, ஒரு கல் ஒரு கண்ணாடி, முரட்டு காளை, ஹரிதாஸ், உன் சமையலறையில், ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, வேலைக்காரன், குருக்ஷேத்திரம், வினய விதேய ராமா, பட்டாஸ், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), வான், டிராகன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஸ்னேகா. 

இப்படி 2000த்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த ஸ்னேகா 2025 வரையிலும் வருடம் தவறாமல் படத்தை நடித்து வந்தாலும், அனைவரது நினைவிலும் மிகவும் பிடித்த படம் என்றால் இவர் கமல்ஹாசனுடன் நடித்த "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் மற்றும் பம்மல் கே. சம்பந்தம்" இப்படங்களில் தனது நகைச்சுவை திறனை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார். அதுமட்டுமல்லாமல் சேரனின் இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப் படத்திலும் அசத்தி இருப்பார். 

இப்படிபட்ட நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 2012ம் வருடம் மே மாதம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் பல திரைபிரபலங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.  தற்பொழுது இருவருக்கும் ஆத்யந்தா, விஹான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

இந்நிலையில், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அங்கு வந்த சக பக்தர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலகலப்பாக பேசி சிரித்து புகைப்படங்களை எடுத்து சென்றனர்.  

இதையும் படிங்க: காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share