×
 

எல்2: எம்பூரான் திரைப்படத்தின் அபார வெற்றி..! பட்ஜெட்டை சொல்லி வாய் பிளக்க வைத்த பிருத்விராஜ்..!

எல் 2 எம்பூரான் திரைப்படம் உருவான விதத்தை அற்புதமாக கூறியிருக்கிறார் பிருத்விராஜ்.

மலையாள திரைப்பட நடிகரான பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமாக `எல் 2: எம்பூரான்' படம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தின் முதல் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. முதல் பாகத்தில் படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். 

`எல் 2: எம்பூரான்' படத்தின் இரண்டாம் பாகத்தை ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோரும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படி இருக்க, மலையாளம், தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வருகிற மார்ச் 27-ம் தேதி ஐமேக்ஸ்-ல் வெளியாகிறது. இந்தநிலையில் ஐமேக்ஸ்-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: முன்பதிவில் மாஸ் காட்டிய "எல் 2: எம்பூரான்"...! எந்த படமும் செய்திராத சாதனையை படைத்து அசத்தல்..!

இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெயிலரைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் 'எம்பூரான்' படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டு இருந்தார். அதில் "எனது அருமை மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எம்பூரான்' படத்தின் டிரெயிலரைப் பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்து அனைத்து ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவு ஆன்லைன் இணையதளங்கள் மூலம் ஆரம்பமான உடனே 96 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதுஎனவும் அடுத்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இது புதிய இந்திய சாதனை எனவும் ஆன்லைன் டிக்கெட் விநியோக முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.10 கோடி குவித்த எம்புரான் உலகளவில் ரூ.12 கோடியை தாண்டி வசூலித்து இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். 

இப்படி இருக்க, சமீபத்தில் பம்பா கணபதி கோயிலில் பாதபடியாக மலையேறி சபரிமலை சென்ற நடிகர் மோகன்லால், ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தார். எதற்காக திடீர் தரிசனம் என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தற்பொழுது அதிக பட்ஜெட்டில் தயாரான 'எம்புரான்' திரைப்படம் வரும் 27-ம் தேதி ரிலீசாவதை முன்னிட்டு மோகன்லால் சபரிமலையில் சுவாமி தரிசனம் நடத்தியதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் மறைமுகமாக மம்முட்டிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கான பூஜை நடைபெற்றதற்கான டிக்கெட்டுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பாக வசூலில் வெற்றியடைந்துள்ளது என்ற பெயரை பெற்ற எல் 2 எம்பூரான் படத்திற்கான சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி தனியார் சேனலில் நடிப்பெற்றது. அதில் பங்கு பெற்ற பிருத்விராஜ், பதினோரு வருடங்களுக்கு முன்பாக நான் கண்ட கனவை உண்மையாக்கிய படம் தான் 'லூசிஃபர்' மற்றும் 'எல் 2 எம்பூரான்' திரைப்படங்கள் எனவும், எம்பூரான் கதை அரசியல் ரீதியாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை இது என்னுடைய எழுத்தாளரான முரளி கோபி-யின் எண்ணத்தில் உருவான அருமையான கதை, அவரது ஆசைக்கு நான் தடையாக இருக்கவில்லை அவ்வளவு தான்.

மேலும், படத்தினுடைய பட்ஜெட்டை நாங்கள் வெளியிடவில்லை ஆனால் படத்தை பார்க்கும்பொழுது அதன் பட்ஜெட் என்னவாக இருக்கும் என்பது உங்களால் கணக்கிட முடியும். அதுமட்டுமல்லாமல் பட்ஜெட் என்பது கேமராவிலோ, படம்பிடிக்கும் இடத்திலோ இல்லை அத்தனை நாள் உழைப்பில் உள்ளது.

இப்படம் கிட்டத்தட்ட 143 நாட்கள் எடுக்கப்பட்டது. அத்தனை நாள் படப்பிடிப்பில் பல இயற்கை தடைகள் எங்களுக்கு வந்தது. ஆனால் என்னுடைய படக்குழுவினர் ஒருநாள் கூட அதற்காக ஒய்வு எடுக்கவில்லை கடுமையாக உழைத்தனர்.  இப்படம் உருவாவதற்கு முன்பாக இரண்டு வருடங்களாக இப்படத்தில் வேலை செய்திருக்கிறோம் என்கிறார்.

இதையும் படிங்க: எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share