அழகோ அழகு அவள் கண் அழகு...! பிரியங்கா மோகனின் அழகில் சிக்கி தவிக்கும் இளசுகள்..!
நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை குமுற வைத்துள்ளது.
கோவிட் சமயத்தில் பல உறவுகளை இழந்து மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் யாருடைய முகங்களிலும் துளி கூட சந்தோசம் இல்லாமல் மக்கள் அனைவரும் நிம்மதி இழந்து இருந்தனர். அப்பொழுது நீண்ட நாள் இடியாவெளிக்கு பின் தியேட்டர்கள் திறந்த பொழுது நாடு முழுவதும் தியேட்டர்களில் இருந்து சிரிப்பு சத்தம் வெளிவந்தது. என்னடா....! மக்கள் சிரிக்கிறார்கள், சோகத்தின் கண்ணீர்கள் எல்லாம் ஆனந்த கண்ணீராக வெளிவருகிறதே..! என அனைவரையும் ஆச்சர்ய உறையவைத்த நெல்சனின் உன்னதமான படைப்பு தான் சிவகார்த்திகேயனை வைத்து அசத்தலாக எடுக்கப்பட்ட "டாக்டர்" திரைப்படம்.
அனிருத் இசையில் மிகவும் பிரமாண்டமாக உருவான இப்படத்தில் வினை ராய் வில்லனாகவும், தீபா ஷங்கர், ஷாஜி சென், அர்ச்சனா விஜே, சுனில் ரெட்டி, அருண் அலெக்சாண்டர், யோகி பாபு, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மிலிண்ட் சோமன் குடும்பமாகவும் இணைந்து நடித்த இப்படத்தில் அவர்களுடன் முதன் முறையாக நடித்து பிரபலமானவர் தான் பிரியங்கா மோகன்.
இதையும் படிங்க: பராசக்தி படத்தில் இணையும் மலையாள ஹீரோ.. படம் கலக்கலாக இருக்கும் போலயே..!
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனை மட்டம் தட்டும் விதமாகவும் எப்பொழுதுமே லவ், கேரிங் எல்லாமே வேண்டும் என நினைக்கும் பெண்ணாவும் காண்பித்து இருப்பார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பிரியங்கா யோகிபாபுவை பார்த்து "அண்ணா சேத்பெட்லையா இருக்கீங்க" என்று சொன்ன டையலாக்கும் அர்ச்சனாவிடம் இளவரசுவை மாட்டி விடும் டயலாக்குகள் எல்லாம் மிகவும் அழகாவும் க்யூட்டாகவும் இருக்கும்.
இப்படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகன், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். டாக்டருக்கு பிறகு அவரது அடுத்த படம் "கேங் லீடர்" என்ற தெலுங்கு படம் தான். இப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
இதுவரை பிரியங்கா மோகன் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், பிரதர், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேபோல்,கன்னடத்தில் "ஓந்த் கதே ஹெல்லா" மற்றும் "அதிதி'யாக" போன்ற படங்களும், தெலுங்கில், நானியின் "கேங் லீடர்" முதலிய படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் 'டாக்டர்' படத்திற்காக சிறந்த தமிழ் அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரியான அழகிய பிரியங்கா மோகன் தற்பொழுது அவருடைய காந்த பார்வை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புஷ்பாவுடன் ஃபையராக வருகிறார் அமரன்... அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரபல நடிகர்..!