வெளியானது கூலி படத்தின் புகைப்படங்கள்...! லோகேஷ் கனகராஜுக்கு ஷாக் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!
லோகேஷுக்கு ஆச்சர்யம் தரும் விதமாக கூலி படத்தின் புகைப்பத்தை வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.
சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தின் டைட்டிலுக்கு பிரச்சனை வந்தது. ஆனால் எப்படி தலைவர் படத்திற்கு மட்டும் டைட்டில் பிரச்சனை வரவில்லை என அனைவரும் யோசிக்கும் படம் தான் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வரும் கூலி திரைப்படம். இப்படத்தின் தலைப்பை இதற்கு முன்பாக எங்கையோ கேட்டதை போல் இருந்திருக்கும். ஆம், இது பிரமாண்ட படத்தின் தலைப்பு தான் கூலி, 2025ம் ஆண்டு வெளியாக இருக்கும் கூலி படத்தலைப்புக்கு சொந்தமான படம், கடந்த 1995ம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படமாகும்.
இப்படத்தின் தலைப்பை வைத்து தான் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என கமல்ஹாசன், விஜய், மற்றும் கார்த்திக்கை வைத்து படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஏன் சூப்பர் ஸ்டாரை வைத்து மட்டும் படம் எடுக்கவில்லை? என பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்திரனின் மிரட்டும் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா-"சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-"கலீசா"என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர்-"தயள்"என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்-"இராசசேகர்" என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன்-"பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான்-"சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் "கூலி".
இதையும் படிங்க: மீண்டும் சூப்பர் ஸ்டார், கார்த்திக் சுப்புராஜ் காம்போ..! இந்த முறை என்ன மேஜிக் பண்ண போறாரோ..!
இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ளதால், எப்பொழுது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். மேலும், இப்படத்திற்கு முன்பாக ரஜினியை வைத்து "நெல்சன் திலீப்குமார்" இயக்கத்தில் உருவான "ஜெயிலர்" படத்தை போல இப்படம் பிரமாண்டமாக இருக்கும் என ஒருபுறம் ரசிகர்கள் கூற, இல்லை... கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" படத்தை போல தலைவரை மாஸாக தான் லோகேஷ் காண்பிப்பார். அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இதில் போதை பொருளை தடுக்கும் விதமாக தான் ரஜினி இறங்குவார் என மறுபுறமும் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று லோகேஷ் கனகராஜின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு 'கூலி' படக்குழுவினர், படப்பிடிப்பு தளத்தில் அவரை கேக் வெட்ட வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். படகுழுவினர் மட்டுமல்லாது, பல திரை பிரபலங்களும், மக்களும் தங்களது வாழ்த்துக்களை இணையதளம் வாயிலாக தெரிவித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து,கூலி படத்தினை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், லோகேஷ் கனகராஜை வாழ்த்தும் விதமாக, கூலி பட தயாரிப்பின் பொழுது நடந்த சுவாரசிய நினைவுகளை புகைப்படங்களாக இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படம் ரூ.1000கோடிக்கு மேல் வசூலாகும் எனவும், கண்டிப்பாக கலாநிதிமாறன் கையால் அனிருத், லோகேஷ் கனகராஜ், மற்றும் ரஜினி மூவரும் மீண்டும் கார் வாங்குவார்கள் அதனை நாங்கள் பாப்போம் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கூலி படத்தின் புதிய அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!