×
 

நீச்சல் உடையில் தீரன் மனைவி.. ஹாட் கிளாமரில் மயக்க வைக்கும் நடிகை..!

நடிகை ரகுல் பிரீத் சிங் நீச்சல் உடையில் தனது போட்டோ ஷூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

"சின்ன...சின்ன...கண் அசைவில் உன் அடிமை ஆகவா" என்ற பாடலுக்கும், கண் அசைவில் ஆளையே மயக்கும் பேரழகும் உடையவர் நடிகை ரகுல் பிரீத் சிங். மூக்கு பொடப்பாக இருந்தால் இப்படி எல்லாம் யோசிக்க தோணும் என வடிவேலு பேசும் டயலாக்குக்கு ஏற்ப, இவர் சிரிக்கும் பொழுது மூக்கும் சேர்ந்து சிரிக்கும் சிறப்பு உடைய அழகிய நடிகை என்ற பெயருடையவர். பார்க்க அழகாக இருப்பவர்களிடம் ஏதாகிலும் ஒரு குறை இருக்கும் ஆனால் இவரை படைக்கும் பொழுது மட்டும் பிரம்மன் தூங்கிவிட்டார் போல என ரசிகர்கள் கூறும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர்.

இப்படி இருக்க, பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில்' படித்து பட்டப்படிப்பை முடித்தார். பின் வடிவழகியாக அவதாரம் எடுத்து பின் சினிமாவில் நடிக்க வந்தார். 

இதையும் படிங்க: அவதார் படத்தில் ஹீரோ நான் தான்... ஒரே வார்த்தையில் வாய்ப்பை தவறவிட்டேன் - பாலிவுட் நடிகர் குமுறல்..!

இதனை தொடர்ந்து, வடிவழகியான ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் உருவான "ராம் ராஜ்ய" என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக  அறிமுகமானார். இதற்கு முன்பாக, ரகுல் கல்லூரி படித்து கொண்டிருந்த காலத்தில், தனது கைச்செலவுக்காக, தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய "7/ஜி ரெயின்போ காலனி" படத்தின் கன்னடா ரீமேக்  படமான "கிள்ளி" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பலருக்கும் பிடித்து போக, அவருக்கு அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த கதாபாத்திர நடிகைக்கான விருதுகளும் கிடைத்தது.

பின், 2011-ஆம் ஆண்டு "கேரட்டும்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் "தடையறத் தாக்க" என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். இப்பொழுது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்து இந்திய சினிமாவில் பிரபலமாக வலம் வருகிறார் ரகுல் பிரீத் சிங்.

இவர், தமிழ் சினிமாவில் இதுவரை தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, என்.ஜி.கே, ஸ்பைடர், தேவ், புத்தகம், தீரன் போன்ற திரைபடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிடும் ரகுல் பிரீத் சிங், தற்பொழுது நீச்சல் உடையில் தனது அழகை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இதனை கண்ட ரசிகர்கள் கவர்ச்சியை சற்று குறைத்து கொள்ளலாம், இருப்பினும் அது உங்கள் விருப்பம் நீங்கள் எப்படி வந்தாலும் உங்களுக்கு நாங்கள் ரசிகர்கள் தான் என பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: தனது காதலனை வைத்து கண்ணாமூச்சி ஆடும் நடிகை அபிநயா.. 15 வருட காதல்.. கரம் சேர்ந்தது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share