கர்ப்பமாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி மனைவி..! ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சங்கீதா..!
நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கிதா கர்ப்பமாக இருக்கும் செய்தியை இணையத்தில் அழகாக பதிவிட்டு இருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி என்றாலே காமெடிதான். சினிமாவில் பிஸியாக வலம் வரும் காமெடி நடிகர்களுள் ஒருவர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார். தற்பொழுது எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் படத்தில், "நான் எல்லாம் வியாபாரம் ஆக்கமாட்டேனா உனக்கு..? என்ற டைலாக்கும், "ஓ நீ அப்படி வரியா" என்ற டைலாக்கும், "கிட்னியை கக்கூஸ்ல ஊத்திடுவேன்" என்ற டைலாக்கும்" மிகவும் ஃபேமஸ். இவரது காமெடியை விட இவரது சிரிப்பு கலந்த முகமும், பேசும் தோரணையும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.
இன்று படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதி, விமல் மற்றும் யோகிபாபு போல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை சினிமாவில் தொடங்கியவர். பின் கொஞ்சம் முன்னேறி குரூப் டான்ஸராகவும் நடனமாடியுள்ளார். குறிப்பாக "அவள் வருவாளா" என்ற அஜித்தின் திரைபடத்தில் இடம்பெற்ற 'ருக்கு ருக்கு' பாடலில் ஆடியுள்ளார். பின்னர் இவரது திறமையை பார்த்த இயக்குநர் நெல்சன், கிங்ஸ்லியை அனைவரும் பார்க்கும் படி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: 46 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! வளைகாப்பு புகைப்படங்கள்!
அதுமட்டுமல்லாமல், நயன்தாரா, ஜாக்லின், யோகிபாபு என பல நடிகர்கள் நடித்த "கோலமாவு கோகிலா" படத்தில் கேங்ஸ்டருடன் இணைந்து காமெடி நடிகராக அறிமுகமான ரெடின், தொடர்ந்து எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். இத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கிய "டாக்டர்" திரைபடத்தில் தனது அபார காமெடியை வெளிப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார்.
இப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தந்து பயணத்தை ஆரம்பித்து பத்தோடு பதினொன்றாக நடனமாடி தற்பொழுது, சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து மாஸ் காட்டி வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. இந்நிலையில், 46 வயது வரை தனது வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளாமல் சிங்கிளாக வலம் வந்த ரெடின் கிங்ஸ்லி, 2023ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை காதல் திருமணம் செய்தார்.
பிரபல சீரியல் நடிகையான சங்கிதா, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும், சந்தானம் நடித்த 'பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம்' போன்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி இருக்க, திருமணமான பிறகு இருவரின் காதல் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லியின் மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களை இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: 46 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! வளைகாப்பு புகைப்படங்கள்!