திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி..! அப்படி யாருடைய கல்யாணமா இருக்கும்..?
திருமண விழாவில் தனது உறவுகளுடன் நடனமாடி மகிழ்ந்து இருக்கிறார் நடிகை சாய்பல்லவி.
தலைசிறந்த நடன கலைஞர்கள் என்றால் உலகம் அறிந்தது 'மைக்கல் ஜாக்சன்'. அதுவே இந்தியா என்றால் 'பிரபுதேவா'. பெண்களில் பான் இந்தியா நடனக் கலைஞர் என்றால் அது 'சாய்பல்லவி'. இன்று பல படங்களில் நாயகியாக கலக்கி வரும் சாய்பல்லவி, ஒரு காலத்தில் நடன கலைஞர் தான். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடைய இவர், தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். இதனை அடுத்து தனது முழு திறமையையும் வெளிக்காட்ட நினைத்த சாய்பல்லவி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன போட்டியில் பங்கேற்று தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார்.
அடிப்படையில் மருத்துவரான சாய் பல்லவி, நடன நிகழ்ச்சிக்கு பிறகு "பிரேமம்" இயக்குனரின் கண்களில் பட, அப்பிடத்தில் மலர் டீச்சர் ஆக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதுவரை சாய்பல்லவி என்று இருந்த பெயரை மலர் டீச்சர் என மாற்றி ரசிகர்கள் பித்து பிடித்து அலைந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கும் "அமரன்".. உலக ஃபேமஸ் ஆக மாறும் சிவகார்த்திகேயன்..!
இதனை அடுத்து, பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் நடித்து தற்பொழுது "பான் இந்தியா" நடிகையாக தனக்கென அந்தஸ்தை பெற்றுள்ளார். தற்பொழுது உள்ள நடிகைகள் "லேடி சூப்பர் ஸ்டார்" யார்..? என அடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், தனக்கான ஜாக்பாட் அடித்து விட்டது என "தனி சூப்பர் ஸ்டாராக" வலம் வருகிறார் சாய் பல்லவி.
இந்த சூழலில், அவர் நடித்த அமரன் திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டு நடிகை சாய்பல்லவியின் தங்கையான பூஜாவுக்கும், வினித் என்பவருக்கும் கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி திருமணம் நடந்தது. இதனை முன்னின்று நடத்தி வைத்த, சாய்பல்லவி திருமணத்தில் வந்தவர்களோடு சேர்ந்து ஆடிய நடனம் அப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக மாறியது.
இதனை அடுத்து தற்பொழுது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சாய் பல்லவி, தனது உறவினர் விட்டு திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது தனது உறவுகளுடன் அவர் ஆடி பாடி மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு இப்படி உறவுகளுடன் மகிழ்வது எவ்வளவு அருமையான விஷயம் என சாய்பல்லவியை புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை கயாடு லோஹர்... தமிழில் வரிசை கட்டும் படங்கள்.!