×
 

சமந்தா எக்ஸ் புருஷனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..! சாம்க்காக போர் கொடி தூக்கி அசத்தல்..!

நாகசைதன்யா தற்பொழுது செய்து கொண்ட திருமணம் குறித்து நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புஷ்பா புருஷன் என்றால் நம் நினைவுக்கு வருபவர் நடிகர் சூரி அதே போல் சினிமா வட்டாரங்களில் சமந்தா புருஷன் என்றால் இன்றும் அனைவரது நினைவுக்கு வருபவர் சமந்தாவின் முன்னாள் புருஷனான நாக சைதன்யா. நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனெனில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார் நடிகை சமந்தா. பிறகு, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

 நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சந்தோஷமாக இருந்தவர்களின் வாழ்வில் யார் கண்பட்டதோ தெரியவில்லை நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். 

இதையும் படிங்க: அபிநயாவின் கணவர் பெரிய தொழிலதிபரா...! ஒருவழியாக புகைப்படத்தை பகிர்ந்த அபி..!

இப்படியிருக்க, சமந்தாவும் அவரது கணவரும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என மக்கள் காத்து கொண்டிருந்த சூழலில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. குறிப்பாக சமந்தாவை அதிர்ச்சிக் குள்ளாகியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது. இப்படி இருவரது திருமணத்திற்கு வந்த பல பிரபலங்கள் இவர்களை வாழ்த்தி சென்றனர்.

தற்பொழுது நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் மகிழ்ச்சியாக உலகத்தை சுற்றிவரும் காதல் கலந்த ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில்,சமீபத்தில் சோபிதா துலிபாலா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ரசிகர்கள் மத்தியில் சர்சையாகி உள்ளது.

அப்பேட்டியில் பேசிய சோபிதா, ஒருநாள் நான் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் 'உங்களை நாக சைதன்யா இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் பொழுது நீங்கள் மட்டும் ஏன் அவரை ஃபாலோ செய்யவில்லை?' என கேட்டிருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், எனது செல்போனை எடுத்து அவரது இன்ஸ்டா கணக்கிற்கு சென்று பார்த்தேன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

ஏனெனில் எனக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவர் என்னை ஏற்க்கனவே ஃபாலோ செய்து எனது பதிவுகளுக்கு லைக் போட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவரது இன்ஸ்டாவில் வெறும் 70 பேரை தான் ஃபாலோ செய்து இருந்தார். அதில் என் கணக்கும் ஒன்று என்பது எனக்கு ஸ்பெஷலாக இருந்தது. அதற்கு பின்பு தான் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்து, அது காதலாக மாறி தற்பொழுது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து நாகசைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் இருவரும் சேர்ந்து ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அதில் இருவரும் பார்க்க சிறந்த ஜோடியாக காணப்படுகிறீர்களே உங்களுக்குள் காதலை முதலில் சொன்னது யார்? என நிரூபர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சோபிதா, வெட்கத்துடன் 'நாக சைதன்யா தான்' என தெரிவித்திருக்கிறார். அதற்கு நாக சைதன்யாவும் "With Pleasure" என கூறி அதை உறுதி செய்தார்.

இந்த நிலையில், சமந்தா உடன் வாழ்ந்துகொண்டிருந்த பொழுதே சைதன்யா இப்படி சோபிதாவை காதல் செய்து சமந்தாவிற்கு துரோகம் செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சந்தேகப்பட்ட ரசிகர்..! ஸ்மார்ட்டாக பதில் கூறி எஸ்கேப்பான சமந்தா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share