"ஆண்டவன் சொல்றா அருணாச்சலம் முடிக்கிறா" அது அப்போ.. ஜோதிகா, ரம்யா சொல்றாங்க.. சமந்தா முடிச்சிட்டாங்க.. இது இப்போ..!
ஜோதிகா, ரம்யா வாயால் மட்டும் பேசி கொண்டிருக்க, அதனை செயலில் காண்பித்து அதிரடியாக மாஸ் காட்டி இருக்கிறார் சமந்தா.
மகளிர் தினத்தன்று காலையில் நடிகை ஜோதிகா "மற்ற சினிமாவை போல் தென்னிந்திய சினிமா இல்லை. இங்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளது. பெண்களை சிறப்பு பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாட வைப்பதற்கும், ஆண் நடிகர்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த பழக்கம் இன்றும் இங்கு மாறவில்லை. அதனால் தான், நான் வேறு பாதையை தேடி, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்தேன். பெரும் பாலும் ஹீரோக்கள் உள்ள படங்களுக்கு நோ கூறியுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
ஜோதிகாவை தொடர்ந்து மாலையில் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகை ரம்யா, என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். நான் என்னைவிட குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களோடு பணியாற்றியபோது அந்த படம் ஹிட்டானதும், அடுத்த படங்களுக்கு அதே நடிகர்கள் என்னைவிட ஐந்து மடங்கு சம்பளம் வாங்குவதை பார்த்திருக்கிறேன். நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் கொடுப்பார்கள். இருவருமே நடிகர்கள் தான், இருவரும் ஒரே வேலையை தான் செய்கிறோம். இப்படி இருக்க சம்பளத்தில் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசம் வருகிறது என புரியவில்லை.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு அடிச்ச ஜாக்பாட்.. தியேட்டரை தெறிக்க விடும் பட இயக்குநருடன் கூட்டணி..!
இப்படி சினிமா துறையில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. அதை தைரியமாக சொல்ல முன்வருப்பவர்கள் அதிகம் இல்லை. உதாரணமாக வித்யாபாலன் திறமையான நடிகை தான், ஆனால் அவருக்கு கூட நடிகர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை. எனவே, கன்னட சினிமாவில் பெண்களை மையமாகக் வைத்து அதிகமான படங்கள் வர வேண்டும். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து, வலுவான கதைகளை மக்களுக்கு பிடித்தவாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிகைகளை வலியுறுத்தினார். இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு நாள் விடுமுறையில் இதனை குறித்து பலமாக யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் சற்றும் நேரம் ஒதுக்காமல் சமந்தா அதிரடி காட்டி இருக்கிறார்.
என்னவெனில், நடிகை சமந்தாவும், தனது விவாகரத்திற்கு பிறகு, இனி என் காதலன் சினிமா தான், ஆதலால் மீண்டும் குட்பை சொன்ன நடிப்புக்கு குட் லக் சொல்லி தொடங்க போகிறேன் என்று கூறிஇருந்தார். இப்படி இருக்க, தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கொடுப்பதில்லை என ஜோதிகாவும், ரம்யாவும் இவ்வாறாக குரல் கொடுத்து வந்த நிலையில், ஆண்களுக்கு பெண்களும் குறைந்தவள் இல்லை என சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் நடிகை சமந்தா.
இந்த நிலையில்,கடந்த 2023ம் ஆண்டு சமந்தா "திரலாலா மூவிங் பிக்சர்ஸ்" என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் தற்பொழுது முதல் திரைப்படமாக "பங்காரம்" என்ற படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். மேலும், இப்படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், தயாரிப்பாளராக நடிகை சமந்தா, எந்தவித பாலின பாகுபாடும் இன்றி தனக்கு சம்பளம் வழங்கி இருப்பதாக கூறியுள்ளார். இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு காரியத்தை இதுவரை யாரும் செய்ததில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!