"ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு முதலில் கமிட்டான நடிகை இவங்கதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்..!
புஷ்பா படத்தின் சிறப்பு பாடலான ஊ சொல்றியா மாமா பாடலுக்கு முதலில் கமிட்டான நடிகை சமந்தா இல்லை என இயக்குநர் கூறியிருக்கிறார்.
இந்திய சினிமாவில் தங்கத்தை கடத்தும் மாஸ் படமான கேஜிஎஃப் படத்திற்கு பிறகு மிகவும் பிரமாண்டமாக மாஸாக வந்த திரைப்படம் என்றால் அதுதான் புஷ்பா. கேஜிஎஃப்பில் யாஷ் தங்கத்தை கடத்தினார், இப்படத்தில் அல்லுஅர்ஜூன் மரத்தை கடத்துவார். அப்படி செம்மரத்தை கடத்துவதை மையமாக வைத்து கூலியான ஹீரோ பெரிய கேங்ஸ்ட்டராக உருவெடுக்கும் மிகுந்த ஆக்ஷன் திரில்லர் படமாக, சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான திரைப்படம் தான் 'புஷ்பா 1' மற்றும் 'புஷ்பா 2'.
கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான புஷ்பா முதல் பாகத்தில், கூலியாக இருக்கும் புஷ்பா, தன் தாயை அனைவரும் மதிக்க வைக்கவும், தன்னுடைய பிறப்பை நிலைநாட்டவும் பணக்காரனாக செம்மர கடத்தலில் ஈடுபட நினைத்து, போலீசிடம் இருந்து மரத்தை பாதுகாத்து சென்னைக்கு கடத்த கொண்டாரெட்டியுடன் இருந்து உதவி செய்து.பின் சென்னை முருகனை சந்தித்து பெரிய ஆர்ட்டர்களை எடுத்து சின்டிகேட்டுக்கே தலைவராக மாறுவார். இதில் இவருக்கு வில்லன் என்றால் சகாவத், போலீஸான சகாவத்தை புஷ்பா அவமானப்படுத்துவதால் பழிவாங்க துடித்து காத்திருப்பது போல் படம் முடிந்து இருக்கும்.
இதையும் படிங்க: சாய்ப்பல்லவியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா.. கம் பேக் கொடுத்து அசத்தல்..!
பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 அனைவரது கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் கடத்தலுக்கு தடைகளை கொண்டு வரும் சகாவத்தை மீறி வெளிநாடுகளுக்கு செம்மரத்தை கடத்துவது. தனது மனைவி கேட்டதற்காக முதலமைச்சருடன் ஒரு போட்டோ எடுக்க புதிய முதலமைச்சரை கொண்டு வருவது. கடைசியில் தனது தங்கையை காப்பாற்ற அடிவாங்கி, தனது குடும்பத்துடன் இணைவது போன்று காண்பிக்கப்பட்டு இப்படம் முடிவடைந்திருக்கும். இப்படத்தில் இன்னும் ஜாலி ரெட்டி பழிவாங்க இருப்பதால் புஷ்பா பாகம் மூன்று வர உள்ளது.
இப்படி இருக்க, ரூ.1871 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த புஷ்பா2 படமானது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. பின் சிறிது நாட்கள் கழித்து, அதே நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தினர் போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்லாந்து என ஐந்து மொழிகளில் ஆங் சப் என்ற டைட்டில்களுடன் ஓடிடியில் புஷ்பா 2-வை வெளியிட்டனர்.
இப்படி பத்து மொழிகளில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த இந்த படத்தின் முதல்பாகத்தை எப்பொழுது நினைவு கூர்ந்தாலும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது "ஊ சொல்றியா மாமா" பாடல் தான். அந்த அளவிற்கு படம் முழுவதும் ராஷ்மிகா வந்தாலும், ஒரே பாடலில் நடனம் ஆடி அனைவரது மனதிலும் நின்று இருந்தார் நடிகை சமந்தா.
இப்படத்தில் அனைத்து செம்மரக்கட்டைகளையும் போலீசிடம் இருந்து காப்பாற்றியதாக மங்களச்சினு வைத்த பார்ட்டியில் புஷ்பாவுடன் நடனம் ஆட வந்திருப்பார் நடிகை சமந்தா. மேலும் இப்பாட்டில் வரும் நடன ஸ்டெப்புகளும் இன்றுவரை ஃபேமஸ்.
இப்படி அந்த சிறப்புப் பாடலில் நடனமாட சமந்தாவுக்கு முன்பு "நடிகை கெட்டிகா ஷர்மாவுக்கு" தான் வாய்ப்பு சென்றுள்ளது, ஆனால் அந்த நேரத்தில் வேறொரு படத்தில் அவர் பிசியாக இருந்ததால் இப்பாடலுக்கு அவரால் நடனமாட முடியவில்லை என இயக்குனர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: புஷ்பா பட ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பவர் அல்லு அர்ஜுன் இல்லை..! இயக்குனர் பளிச் பேச்சு..!