ஷுட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகருக்கு விபத்து.. நடிக்க கூடாது என அறிவுறுத்திய மருத்துவர்கள்.. இனி என்ன செய்வாரோ..?
பிரபல நடிகருக்கு ஷுட்டிங் ஸ்பார்ட்டில் ஏற்பட்ட விபத்தால் கால் வீங்கி உள்ளது.
விஷாலின் "இரும்புத்திரை" மற்றும் சிவகார்த்திகேயனின் "ஹீரோ" ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இப்படங்களை தொடர்ந்து தனது அடுத்த படமாக கார்த்தியை வைத்து சர்தார் திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்சின் தயாரிப்பில் உருவாக்கினார்.
இப்படம் பல போராட்டங்களை கடந்து உருவாக்கப்பட்ட படம் எனலாம் காரணம், இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 2021 ஏப்ரல் 26 அன்று சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, 2021 ஏப்ரல் 29 அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் மொத்த படக்குழுவினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். பின் ஒருவழியாக கோவிட் தொற்று நிறைவுக்கு வர, படப்பிடிப்பானது மீண்டும், ஜனவரி 2022 அன்று மீண்டும் தொடங்கியது.
இதையும் படிங்க: பேண்ட் சட்டையில் பிரபல நடிகை.. கவர்ச்சியில் புதிய பரிமாணம்.. நடிகை ஸ்ரேயா போட்டோ ரிலீஸ்..!
ஏற்கனவே பல இழப்புகளை சந்தித்தாலும், 2 கோடி மதிப்பில் தற்காலிக கட்டமைப்புகள் அமைத்து, படத்தின் முக்கிய பகுதிகளை படமாக்க திட்டமிட்டனர். இதனால் சென்னை, மும்பை, மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கவேண்டிய நிலை தன் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தேசத் துரோகி என்ற பட்டத்தை சுமந்து தனது குடும்பத்தை இழந்து, தன் வாழ்கையை ஜெயிலில் கழித்து, 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஓர் இந்திய உளவாளியின் கதையாகவும், தனது தந்தையை பற்றிய உண்மையை கண்டுபிடிக்கும் மகனின் கதையாகவும் இப்படம் உருவாக்கப்பட்டது. பல போராட்டங்களுக்கு பின் எடுக்கப்பட்ட திரைப்படம் வெற்றிகரமாக தீபாவளி அன்று திரைக்கு வந்து பலரது பாராட்டுகளை பெற்றது.
இதனை தொடர்ந்து, 2022 அக்டோபர் 27ம் தேதி அன்று நடந்த படத்தின் வெற்றி விழாவில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சர்தார் 2க்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்,ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் முதலானோர் நடித்து வருகின்றனர்.
'சர்தார் 2' படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் பிரத்யேக சண்டை காட்சியை படமாக்கியபோது நடிகர் கார்த்தியின் காலில் பெரும் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் ஒரு வாரம் கார்த்தி கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சர்தார் படத்திற்கு எத்தனை தடுங்கள் வந்தாலும் அதனை கடந்து படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களை கவர வைத்த கவர்ச்சி புகைப்படம்... பூர்ணிமாவின் போட்டோவால் மதி மயங்கிய ரசிகர்கள்...!