×
 

மரணத்தை முன்பே அறிந்த ஹுசைனி..! ஆன்மா கடவுளிடம்.. உடல் மாணவர்களிடம்.. இதயம் மட்டும்..!

நான்கு நாட்களுக்கு முன்பாக உடலை தானம் செய்த மாஸ்டர் ஷிகான் ஹுசைனி இன்று மரணம் அடைந்துள்ளார்.

மான்கராத்தே மற்றும் இறுதிச்சுற்று போன்ற படங்களில் பாக்சிங் ரிங்கில் சென்று ஹீரோக்கள் ஜெயிக்க வேண்டுமானால் அவர்களுக்கு சண்டையை சிறப்பாக பயிற்சி கொடுக்க அதிரடியான மாஸ்டர்கள் வருவார்கள். ஹீரோ அடிக்கும் பொழுதும் அடி வாங்கும் பொழுதும்  ஹீரோயினை அதிகம் காண்பிப்பதை விட பெரும்பாலும் மாஸ்டரையே காண்பிப்பர். அந்த அளவிற்கு அந்த ரிங்கில் மாஸ்டரின் அவசியம் முக்கியம்.

அந்த வகையில் நடிகர் விஜயின் "பத்ரி" திரைப்படத்தில் தன் அண்ணனுக்காக ரிங்கில் இறங்கும் விஜய்க்கு, கோச்சாக நடித்து பிரமானவர் தான் மறைந்த நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி. உண்மையிலேயே இவர் படத்தில் மட்டும் மாஸ்டர் அல்ல நிஜ உலகிலும் பல மாணவர்களுக்கு சிறந்த ஆசானாக வாழ்ந்தவர். 

இப்படிப்பட்டவரின், ஆரம்ப வாழ்க்கை சினிமாவில் தொடங்கிய படம் என்றால் அது உலக நாயகன் நடிப்பில் 1986ல் வெளியான "புன்னகை மன்னன்" திரைப்படம் தான். அப்படத்தில் நடித்து தனக்கான அங்கிகாரத்தை சினிமாவில் பிடித்தவர். இப்படி பட்ட மாஸ்டர் ஷிகான் ஹுசைனி சிறந்த வில்வித்தை வீரர் என்பதால் தன்னை போல் பல மாணவர்கள் வில்வித்தையில் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணி அவர்களுக்கு பயிற்சியாளராக மாறினார். பல மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சிகளை வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வில்வித்தை மாணவர்களை அதிகமாக உருவாக்க வேண்டும் எனவும் நிறைய மாணவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க காத்துகொண்டு இருக்கின்றனர். ஆதலால் அவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என தமிழக விளையாட்டு துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..?

மேலும், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். பார்க்க கம்பிரமாக இருந்த மனுஷன் உடைந்து போய் இருந்த காணொளி பார்ப்பவர்களை கலங்கடித்தாலும், அதில் அவர் பேசிய வார்த்தைகள் பலரது மனதை தெய்த்தது. அதில், "நான் உயிர் வாழ வேண்டுமானால் தினமும் 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. கண்டிப்பாக என் மரணம் வந்துவிடும் என்பது எனக்கு தெரியும்.

ஆதலால் நான் இறந்த பிறகு, யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் மண்ணுக்கு செல்லும் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சி பணிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தனமாக அளிப்பதாகவும் தனது இதயத்தை மட்டும் தன் கராத்தே மாணவர்களிடம் கொடுத்து விடுங்கள், அவர்கள் அதனை பத்திரமாக பாதுகாத்து கொள்வார்கள் என கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், கடைசி நொடியிலும் நடிகர் விஜய்க்கு கடிதம் மூலம் "வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர் வீராங்கனைகளை உருவாக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார். 

மாதவனும் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் "முன்னும் பின்னும் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் விடும் மனசு தான் கடவுள்" என்று கூறுவதை போல், அனைத்து உள்ளங்களுக்காக கவலை பட்டு கண்ணீர் சிந்தி தனது மரணத்தை இறைவனிடம் வேண்டிய  60 வயதான ஷிகான் ஹுசைனியின் வேண்டுதலுக்கு ஏற்ப இன்று அதிகாலை 1.40 மணியளவில் அவரது உடலில் இருந்து அவரது ஆன்மா பிரிந்தது.

தன் மரணத்திற்கு முன்பாக அனைத்தையும் சரியாக செய்து முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டு மறித்து போன இவரது உடல், தற்போது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகரில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்திய பின்பு அவரது உடல் கல்லூரிக்கும் இருதயம் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடமும் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share