×
 

ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் மூன்று படங்கள்..! பராசக்தி, ஜனநாயகம் படத்திற்கு புதிய சிக்கல்..!

பராசக்தி மற்றும் ஜனநாயகம் படம் வெளியாகும் சமயத்தில் மூன்றாவதாக ஒரு படம் வெளியிட தயாராக உள்ளது. 

இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' போன்ற படங்களை இயக்கி  மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'பராசக்தி' படத்தை இயக்கி வருவது அனைவருக்கும் தெரியும். இப்படத்தில் சிவாவுடன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் சூழலில் தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பானது இலங்கையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இதனை தொடர்ந்து, பராசக்தி படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருந்த வேளையில்,இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டவுன் பிக்சர்ஸின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், சமீபத்தில் பராசக்தி படத்தின் போஸ்டரை பதிவு செய்து அதன்கீழ் "This Pongal" என குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அஷ்வத் மாரிமுத்துவை அழவைத்த நடிகர் விஜய்.. இப்படி பண்ணிட்டாரே.. போஸ்ட் போட்டு இயக்குனர் கதறல்..!

இதனை அடுத்து, நடிகர் விஜயின் சினிமா பயணத்தின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படும் "ஜனநாயகம்" திரைப்படம் பலரது கவனத்தை பெற்று இருக்கிறது. இப்படம் உருவாதில் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வந்த ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இதனை தொடர்ந்து கணக்குகள் முடங்கி இருந்தாலும் படத்தை எடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தயாரிப்பாளர் ஜனநாயகம் படத்தின் உரிமையை தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ.80 கோடிக்கு விற்று உள்ளார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதுடன்  'ஜனநாயகம்' படம் 2026 அன்று 9ம் தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இப்படி விஜயின் ஜனநாயகம் படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கலுக்கு வெளியாகி வசூலில் மோத காத்திருக்க, இவர்களுக்கு நடுவில் புதியதாக,'இந்த கவுசிக் குறுக்கால வந்தால்' என்பது போல ஒரு படம் நுழைந்து உள்ளது .இந்த இரண்டு படங்களுடன் போட்டிக்கு கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் களமிறங்கியுள்ளது. அதன்படி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடுவோம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இப்படியிருக்க, கண்டிப்பாக இப்படம் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் வசூலையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: அன்று போக்கிரி பொங்கல்; இன்று ஜனநாயகன் பொங்கல்... வெளியானது புதிய அப்டேட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share