×
 

சினிமா துறையினரை கிழித்தெடுத்த சனம் ஷெட்டி.. பூதாகரமாக மாறும் சுருதி அந்தரங்க வீடியோ விவகாரம்..! 

சுருதி நாராயணன் அந்தரங்க வீடியோ விவகாரத்தில் தனது ஆதங்கக்கத்தை தெரிவித்து இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.

சினிமா உலகில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டும் என பல கருத்துள்ள படங்களை எடுத்தாலும் அதற்கு எந்த பலனும் இல்லை. காரணம் கருத்துக்களை எடுத்து சொல்லும் சினிமா துறையில் தான் அதிகமாக பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்க படுகிறார்கள். இதனை குறித்து பல நடிகைகளிடம் கேட்டால் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

மேலும், வெள்ளித்திரையை விட சின்ன திரையில் தான் பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் சீண்டல்களும் நடைப்பெற்று வருகிறது என கண்ணீர் மல்க கூறியிருக்கின்றனர் பல நடிகைகள். ஆனால் தவறு செய்கிறவர்களை பகைத்தால் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்துவிடுமே என அமைதியாக இருக்கும் நடிகைகளும் அதிகம். ஒருவேளை அவர்கள் அனைவரும் வாயை திறந்தால் பல பெரிய மனிதர்கள் உள்ளே செல்ல நேரிடும். 

அந்த அளவிற்கு மோசமான நிலைமையில் உள்ளது சினிமாத்துறை. சமீபத்தில் நடிகை ஷாலினி பாண்டே, தனது 22வது வயதில் தென்னிந்தியப் படத்தில் நடித்து கொண்டிருந்த பொழுது நடந்த சம்பவத்தை கூறினார். அதில், கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்த ஷாலினி பாண்டேவை சந்திக்க வந்த படத்தின் இயக்குனர் வேண்டுமென்றே, கதவைத் தட்டாமல் நேராக உடைமாற்றும் அறைக்கு உள்ளே வந்து இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலினி, கோபமடைந்து, இயக்குனரை சத்தமாக திட்டி வெளியேறச் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் அங்கிருந்த படக்குழுவினருக்கு தெரிந்தும் ஒருவர் கூட தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். 

இதையும் படிங்க: சீரியல் நடிகை வீடியோ லீக் விவகாரம்... நெத்தியடி அடித்த மருத்துவர்!!

இந்த நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வில்லியாக நடித்து புகழ்பெற்ற ரோகிணிக்கு தோழியாக 'வித்யா' எனும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். இவரது அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் உலா வந்தது.

இதனை பார்த்த சிலர் இது ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட மார்பிங் வீடியோ, 'casting couch வீடியோ' என கூறிவந்த நேரத்தில், இவைகள் அனைத்தும் மார்பிங் வீடியோ என ஸ்ருதி பதிவிட்டு இருந்தார். ஆனால் அடுத்த இரண்டாவது நாளில் மீண்டும் ஒரு வீடியோவும் வெளியானதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இப்படி இருக்க, சுருதிக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் "இளம் நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதும் அதைப்பகிர்வதும் ஆண்கள் தானே. தமிழக ஆண்கள் லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்கின்றனர். ஆனால், இந்த நாட்டில் லஞ்சம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை.

தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிடம் பாலியல் தேவைகளைக் கேட்கும் அந்த அருவருப்பான மனிதனைப் பற்றி யாருமே பேசவில்லை. இப்படிபட்டவர்கள் தொடர்ச்சியாக இதை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், பெண் தன்னை தொடர்ந்து அழித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது?

சுருதி நாராயணன் வீடியோவுக்கு பின்னால் இருந்த ஆண்கள் யார்? ஒரு இழிமகன் எடுத்த வீடியோவையும் அதற்கான லிங்க்கையும் பல இழிமகன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா? சரி. பெண்ணியம் பேசும் முற்போக்கு நாட்டில் ஆச்சரியப்படுவதற்கில்லை, அத்தனை பேரும் நாசமா போங்க, அழிஞ்சு போங்க, உங்களை இப்படி வளர்த்தவங்களோட கூட கட்டைல போங்க." என மிகக் கடுமையாகத் தன் கருத்துகளைத் முன்வைத்து இருந்தார். 

இவரை தொடர்ந்து தற்பொழுது சனம் ஷெட்டியும் களத்தில் இறங்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛ஸ்ருதி நாராயணின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களிடம் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். இது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனை கிடையாது. இது முற்றிலும் ஒரு வியாபாரம். 'காஸ்டிங் கவுச்' என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட சதிச்செயல்.

சினிமாவில் ஆடிஷன் என்ற பெயரில் பெண்களிடம் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா? பல பெண்களின் சாபத்தை வாரி குவித்து ஒரு படத்தை எடுக்கிறீர்களே நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா? வெளியான வீடியோ போலியான வீடியோ என ஸ்ருதி நாராயணன் தொடர்ந்து வலியுறித்தி வருகிறார். அவர் கூறுவது உண்மை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளாலும், இதுபோன்ற காஸ்டிங் கவுச்சாலும், இன்று என்னைப் போன்ற பல பெண் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்களே... கொஞ்சம் கேளுங்க... உங்கள் சினிமா துறை நாறிப் போய் உள்ளது. முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, நியாயமான பட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்' என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அந்தரங்க வீடியோ லிங்க் வேணுமா.. உன் வீட்டு பெண் வீடியோவ பாரு.. கொதித்துப்போன ஸ்ருதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share