×
 

ரூமுக்கு அழைத்த இயக்குனர்.. ஒரு நொடியில் அத்துமீறல்.. நடிகையின் பேச்சால் பதற்றம்..!

பிரபல நடிகை, தனக்கு இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா என்றாலே பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது. அதில் நன்றாக வாழ்ந்து சரிந்தவர்களும் உண்டு, சரிவில் இருந்து உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால் எல்லா துறைகளிலும் மாறாமல் கேட்கப்படும் ஒரே வார்த்தை "அட்ஜெஸ்ட்மென்ட்". இந்த ஒரு வார்த்தை பலரது திறமையை கட்டி போட்டுள்ளது. உதாரணமாக பிக்பாஸ் 7-ல் கலந்து கொண்ட நடிகை சுசித்ரா, அந்நிகழ்ச்சியில் தன் சினிமா வாழ்க்கை அழிந்தமைக்கு காரணம் பெரிய ஹீரோவுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் ஆகாததால் என கூறி அழுதார். இப்படி இன்னும் எத்தனை நடந்திருக்கிறது என யாருக்கும் தெரியாது.

இந்த வகையில் சினிமா மட்டும் அல்லாது பல இடங்களில் பாலியல் தொல்லை என்பது ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகை காயத்ரி ரேமா ஒரு பேட்டியில் "ஒரு நாள் பெரிய ஹீரோ ஒருவரிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன், முதலில் சரி என்று சொன்னவர் மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்து ஏற்காட்டுக்கு வர சொன்னார். இதனை சற்றும் எதிர்பாராத நான் கோபத்தில் உங்கள் மனைவியை அழைத்து செல்லுங்கள் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். ஆனாலும் சினிமாவில் சில நல்ல உள்ளங்கள் இருக்கும் பட்சத்தில் இப்படியும் பல அட்ஜெஸ்ட்மென்ட் சந்தர்ப்பவாதிகளின் சூழ்ச்சியில் சிக்கி அழிக்கின்றனர் பல பெண்கள்" என ஆவேசமாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: பிரபல மாடலின் கவர்ச்சி புகைப்படம்..தெலுங்கு நடிகையின் கவர வைக்கும் போட்டோ ஷூட்..!

இன்னும் எத்தனை நடிகைகளும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளும் இப்படி சிக்கி தவித்து கொண்டு இருக்கின்றனர் என தெரியவில்லை என அனைவரும் புலம்பி கொண்டிருக்கும் வேளையில் நடிகை அஸ்வினி தன்னையும் ஒரு இயக்குநர் ரூமுக்கு அழைத்தார் என கூறி பீதியை கிளப்பி உள்ளார்.

தற்பொழுது சுழல் 2 வெப் தொடரில் நடித்து உள்ள நடிகை அஸ்வினி, இந்த வெப் தொடருக்கான நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பொதுவாக நான் எந்த ஷூட்டிங் என்றாலும் என் அம்மாவுடன் தான் வருவேன். அப்படி இல்லையென்றால் பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இருந்தால் மட்டுமே வருவேன் ஏனெனில் நான் கொஞ்சம் பயப்படுவேன் மற்றும் கவனமாக இருப்பேன். 

இப்படி இருக்க, எனது வாலிப வயதில் நான் ஒரு படத்தில் நடிக்க சென்றேன், அப்பொழுது என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், தனியாக சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் ஒரு பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இருந்தார். அப்பொழுது இயக்குனர் தன்னை அழைப்பதாக தகவல் வந்தது. ஆதலால் துணைக்கு நான் மேக்கப் பெண்ணை அழைத்தேன் ஆனால் அவர்கள் வரவில்லை. சற்று சந்தேகத்துடன் தான் நான் ரூமுக்குள் சென்றேன். அதற்கு ஏற்றார் போல் நான் ரூமுக்குள் சென்றவுடன் இயக்குனர் என்னை கட்டியணைத்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சற்று பதறிப்போன நான் அவரை தள்ளிவிட்டு ஓடி வந்துவிட்டேன். 

பின் வீட்டிற்கு வந்த நான், நடந்தவைகளை என் அம்மாவிடம் கூறி அழுதேன். ஆனால் நான் அழுவதை பார்த்த என் அம்மாவும் கதறி அழகுவதை பார்த்து நான் மேலும் பயந்து போனேன். பின் சினிமா வாழ்க்கையில் இப்படியும் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு தைரியமாக முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளேன் என கூறினார்.ஆனாலும் அந்த இயக்குனரின் பெயரை சொல்ல மறுத்து விட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இயக்குனரின் பெயரை கேட்டு வருகின்றனர். 
 


  

இதையும் படிங்க: கட்டும் சேலை மடிப்பில் கவர வைத்த பவித்ரா ஜனனி... இந்த சிரிப்புக்கு விலையே இல்லை.. பாராட்டும் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share