விளம்பரங்களில் நடிக்கும் அளவிற்கு தள்ளப்பட்ட சிம்பு..! ரகசியத்தை உடைத்த சினிமா வட்டாரங்கள்..!
நடிகர் சிம்பு தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்க காரணம் என்ன என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சிலம்பரசன் என்றும் மக்கள் மனதில் "STR" ஆகவும் "லிட்டில் சூப்பர் ஸ்டாராகவும்" வலம் வருபவர். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் உள்ள இவர், பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக வல்லவன் படத்தில் பல்லனாக வந்து ரீமா சென்னுக்கும் நயன்தாராவுக்கும் காதலான சிறப்பாக நடித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் "என்ன பாக்குற.. லெப்ட் ல விட்டா ரைட்ல திரும்பிக்கும்" என்ற டையலாக்கும் "ஏன்னா நான் தான் உன்ன லவ் பண்ணலையே" என்ற டையலாக்கும் மிகவும் ஃபேமஸ். இதேபோல் மன்மதன் படத்திலும் இரண்டு கதாபாத்திரத்தில் மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார்.
இப்படி படங்களில் சிறப்பாக நடிக்கும் சிம்பு என்கின்ற சிலம்பரசன், சரியாக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் எனவும் நேரத்தை கடைபிடிக்க மாட்டார் எனவும் சினிமா வட்டாரத்தில் பலராலும் பேசப்பட்டதால் சில காலங்கள் படவாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தார். பின், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து இளைஞர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார். பின் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது உடல் எடையை குறைத்து, மாநாடு படத்தில் மாஸ் காமித்தார்.
இதையும் படிங்க: சிவாவை பின்னுக்கு தள்ளிய சிம்பு..! இனி விஜய்க்கு அடுத்து STR தான்..!
இந்த வகையில் பல தோல்விகளையும் வெற்றிகளையும் கணிசமாக தனது வாழ்க்கையில் பார்த்த சிம்பு, இதுவரை காதல் அழிவதில்லை, அலை, தம், குத்து, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், சரவணா, காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, வானம், ஒஸ்தி, போடா போடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலு, காக்கா முட்டை, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசாராதவன் அடங்காதவன், காற்றின் மொழி, செக்கச்சிவந்த வானம், 90 ML, மாநாடு, ஈஸ்வரன், மஹா, பத்து தல, தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவின் 49வது படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார் சிம்பு. இந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்ததாக சிம்புவின் ஐம்பதாவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது 51வது படத்தை நடிக்கிறார்.
இப்படி இந்த வருடம் மூன்று படங்களை கைகளில் வைத்திருக்கும் நடிகர் சிம்பு தற்பொழுது ஐபிபோ, காசா கிராண்ட் என பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். திடீரென சிம்பு பட அறிவிப்புகளையும், பெரிய விளம்பரங்களிலும் நடிக்க காரணம் என்ன? என பலருக்கும் குழப்பம் இருந்து வந்த நிலையில், அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன் படி, சிம்பு தனது 50-வது படத்தை சிறப்பாக எடுக்க நினைத்து அதற்காக ரூ.100 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளாராம். அதற்கான தொகையை சேர்க்க தற்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் கடுமையாக சிம்பு நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அப்பொழுது கண்டிப்பாக பாகுபலி,கேஜிஎப், சலார் உள்ளிட்ட படங்களை தோற்கடிக்கும் படமாக சிம்பு படம் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவாவை பின்னுக்கு தள்ளிய சிம்பு..! இனி விஜய்க்கு அடுத்து STR தான்..!