குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!
தனது மனைவியான நடிகை குஷ்பூவுக்காக தற்பொழுது மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.
தமிழ் திரையுலகில் எத்தனையோ இயக்குநர்கள் வருகின்றனர் போகின்றனர் ஆனால் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநர் என்றால் அவர் தான் இயக்குநர் சுந்தர் சி. இப்படி 2கே கிட்ஸ் வலம் வரும் காலக்கட்டத்திலும் அவரை நினைவு கூற வைத்திருக்கும் திரைப்படம் என்றால் அரண்மனை திரைப்படம். எப்படி ஒருபுறம் ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா' திரைப்படத்தை பல பாகங்களாக தயாரித்து வருகிறாரோ, அதேபோல் சுந்தர் சி-யும் தனது பாணியில் அரண்மனையை பல பாகங்களாக பிரித்து வெற்றிகரமாக தயாரித்து உள்ளார்.
இத்தனை வருட காலங்களாக நடிகர்களை வைத்தும் தானே படத்தில் நடித்தும் தனது திறமையை காமித்த சுந்தர் சி தற்பொழுது பேய்களை வைத்தும் தனது திறமையை காண்பித்து வருகிறார்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமான கோயில் செட்.. சிவப்பு உடையில் நயன்தாரா.. களைகட்டிய மூக்குத்தி அம்மன் பட பூஜை..!
இயக்குநர் சுந்தர் சி, கடந்த 1995 ஆம் ஆண்டு அருண் விஜயை வைத்து "முறைமாமன்" என்ற திரைப்படத்தை தயாரித்து தமிழக மக்கள் மனதில் இயக்குநராக பதிந்தவர். அது மட்டுமல்லாமல் இதுவரை ரசிகர்கள் இணையத்தில் தேடித் தேடி பார்த்தாலும் கிடைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" என்ற சிறப்பு வசனங்களுடைய திரைப்படமான 'அருணாச்சலம்' திரைப்படத்தையும் இயக்கியவர் இவரே.
மேலும், "யாருன்னே தெரியாத ஒருவருக்காக கண்ணீர் விடும் அந்த மனசு தான் கடவுள்" என்ற ஒற்றை வார்த்தையை வைத்து நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் ஆகியோரின் நடிப்பில் அனைவரது உள்ளத்தையும் உடைத்த "அன்பே சிவம்" திரைப்படத்தை இயக்கிய பெருமையை உடையவர். தமிழ் திரை உலகில் கார்த்திக், பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார் மற்றும் அஜித் குமார் என பல முன்னணி நடிகர்களையும் வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி.
இதனைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு "தலைநகரம்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அப்படத்தில் நடித்த அவரை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், 2007 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "வீராப்பு" திரைப்படத்தையும், 2008 ஆம் ஆண்டு வெளியான "சண்டை" திரைப்படத்தையும் பார்த்த மக்கள் இவரை கதாநாயகனாக தங்கள் மனதில் ஏற்றுக் கொண்டனர்.
இப்படி இருக்க, இதுவரை இயக்குனர் சுந்தர் சி, "முறைமாமன், அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, கலகலப்பு, அரண்மனை, மத கஜ ராஜா, ரெண்டு, லண்டன் சின்னா, தக்கத்திமிதா, கிரி, வின்னர், இன்னும் நிறைய படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து உள்ளார். தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் உருவாக இருக்கும் "மூக்குத்தி அம்மன்-2" திரைப்படத்திற்கான முக்கிய விழா சென்னையில் மார்ச் 6ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மனைப் போலவே நடிகை நயன்தாரா வந்ததையும் நாம் அறிவோம். நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறித்தும் குஷ்பூ பேசியிருந்தார்.
இந்நிலையில்,தனது திருமண நாளுக்காக, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற சுந்தர் சி,அங்கு சாமி தரிசனம் செய்தார். பின் தனது முடியை முருகனுக்கு காணிக்கையாக செலுத்த, அவர் மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். மேலும் கோவிலில் சுந்தர் சி மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?