வெளியானது 'கேங்கர்ஸ்' படத்தின் ஐட்டம் சாங்..! பாடல் வரிகளில் தெறிக்கவிட்ட சுந்தர்.சி..!
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் 'கேங்கர்ஸ்' படத்தின் பாடல் வெளியானது.
இதுவரை இயக்குனர் சுந்தர் சி, "முறைமாமன், அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, கலகலப்பு, அரண்மனை, மத கஜ ராஜா, ரெண்டு, லண்டன் சின்னா, தக்கத்திமிதா, கிரி, வின்னர், இன்னும் நிறைய படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து உள்ளார்.
தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் தயாராகி வரும் "மூக்குத்தி அம்மன்-2" திரைப்படத்திற்கான முக்கிய விழா சென்னையில் மார்ச் 6ம் தேதி பிரமாண்டமான கோவில் செட் அமைத்து நடைபெற்றது. இப்படம் தற்பொழுது ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இவரை போல தமிழ் சினிமாவில் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் காமெடி நடிகரான வடிவேலு. இவரது திரையுலக பயணம் 1988 ஆம் ஆண்டு தொடங்கி 2025ம் ஆண்டு வரை நீடித்து கொண்டே இருக்கிறது. ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்றால் அது கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ தான். இப்படத்தில் தான் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இதையும் படிங்க: ட்ரெய்லரால் மிரண்டு போன ரசிகர்கள்..! 'கேங்கர்ஸ்' ரிலீசுக்காக காத்திருக்கும் மக்கள்..!
இதனை தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு தம்பிராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதேபோல் தெனாலிராமன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார். இதற்கிடையில் அரசியல் விளையாட்டில் சிக்கிய வடிவேலு பலவருடங்களாக படத்தில் நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். பின் அவர் மீது உள்ள தடைகள் யாவும் நீங்கி தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து பல படங்களில் நடித்து உள்ளனர்.குறிப்பாக இவர்கள் கூட்டணியில் வெளியான வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.இந்த நிலையில், இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படமான 'கேங்கர்ஸ்' படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோருடன் நடிகர் வடிவேலும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் ரூ.100 கோடி பணத்தை கொள்ளை அடிக்க அனைவரும் முயற்சி செய்கின்றனர். அவர்களால் முடியாமல் போக கடைசியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டு சேர்ந்து பணத்தை எடுப்பது போல் ட்ரைலர் உள்ளது. மேலும், டிரைலரில் வடிவேலு பலவிதமான கெட்டப்பில் சிரிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
மேலும், படக்குழு வெளியிட்ட போஸ்டரில் `குப்பன் தொல்ல தாங்கலயே இவ நாலு நாளா தூங்கலயே" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வரிகள் மற்றும் ஹீரோயின் நிற்கும் ஸ்டைலை பார்த்தால் இது Item Song- ஆக தான் இருக்கும் என அனைவரும் கணிதத்தை போல் சரிகமப சேனலில் இந்த பாடலுக்கான ஃபுரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக பாடல் பயங்கர ஹிட் கொடுக்கும் எனவும் படம் அதைவிட மாஸ் ஹிட் கொடுக்கும் எனவும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: கிளாமர் லுக்கில் நடிகைகளுக்கு டஃப் பொடுக்கும் குஷ்பூ மகள்..!