×
 

தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்ட விஜய் வர்மா...! சூசகமாக காதல் பிரிவை அறிவித்து வருத்தம்..!

தமன்னாவை ஐஸ்கிரீமுடன் ஒப்பிட்டு காதல் பிரிவை அறிவித்து இருக்கிறார் நடிகர் விஜய் வர்மா.

அனைத்து மக்களால் "மில்க் பியூட்டி" என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை தமன்னா. அந்த அளவிற்கு பார்க்க அழகாகவும் ஆளை மயக்கும் முகபாவனையும் கொண்ட இவரது நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். தமன்னா என்றால் சிரிப்பு, அழகு என்பது ஒருபுறம் இருக்க அவரது ரசிகர்களால் 'இடையழகி' என அன்புடன் அழைக்கப்படுபவர். இவரை, சமீபத்தில் அனைவரும் 'மில்க் பியூட்டி' என அழைப்பதால் கொஞ்சம் கோவமாகவே சுற்றி வந்தார். 

அதற்கு ஏற்றார் போல் இவரது 'ஓடெல்லா 2' படத்திற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'லட்சுமி' என்ற பெண் ஒருவர், தமன்னாவிடம் மில்க் பியூட்டியாக இருக்கும் நீங்கள் எப்படி ஓடெல்லா திரைப்படத்தில் நடித்திர்கள் என கேட்க நொடிப் பொழுதில் கடுப்பான தமன்னா. "ஏன் நீங்க எப்படி நடிச்சீங்கன்னு கேக்குறீங்க.." அப்படி நான் என்ன பண்ணேன். நிங்களும் ஒரு பெண் தானே... நான் என்ன மோசமானவளா நீங்கள் எப்படி இந்த படத்தில் நடிச்சீங்கன்னு கேக்குறீங்க... ஒரு பெண் இப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதை பார்த்து பெருமைப்படுங்கள் என அந்த பெண்ணை விளாசி எடுத்தார். 

இதையும் படிங்க: காதல் தந்த வலிகளை மறக்க.. பஞ்சுமிட்டாய் சேலையில் வலம் வரும் தமன்னா பாட்டியா..!

இதனை பார்த்த மக்களுக்கு எப்பொழுதும் சிரித்த முகமாக, அழகாக இருக்கும் தமன்னாவுக்கும் கோபம் வரும் தான் போல என வியப்புடன் பார்த்து வந்தனர். இப்படிப்பட்ட தமன்னாவின் சிறந்த படங்களாக பார்த்தால், எனக்கு 20 உனக்கு 18, வியாபாரி, அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, கோ, சிறுத்தை,

வேங்கை, வீரம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, தேவி, கத்திச்சண்டை, தர்மதுரை, தோழா, பாகுபலி 2, கே ஜி எஃப் (சேப்டர் 1), ஸ்கெட்ச், சயீரா நரசிம்ம ரெட்டி, கண்ணே கலைமானே, ஆக்‌ஷன், பெட்ரோமாக்ஸ், தேவி 2, ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை தமன்னா காதலித்து வந்த விஜய் வர்மாவுடன், நீண்ட காலமாக இருந்த காதல் பந்தத்தை சமீபத்தில் முறித்திருக்கிறார். அதற்கு உதாரணமாக, சமீபத்தில் தமன்னா போட்ட பதிவே சாட்சி, அதில், "வாழ்க்கையில் அற்புதங்கள் என்பது அதுவாகவே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள பழக வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை பார்த்தே ரசிகர்கள் இவர்களது பிரிவை உறுதி செய்தனர். 

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமன்னாவும் விஜய் வர்மாவும் ஒரே இடத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். ஆனால் அப்போதும்  இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சரியாகக்கூட பேசிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இத்தனை ஆதாரங்களுக்கு மத்தியில் தற்பொழுது விஜய் வர்மா அளித்த பேட்டி பேசுபொருளாக மாறியுள்ளது. அதில், "காதல் என்பது ஐஸ்கிரீம் மாதிரி என்ஜாய் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எந்த flavor வந்தாலும், அதை வாங்கிக்கொண்டு, அதனுடன் இருக்க வேண்டும்" என கூறி இருக்கிறார்.  

இதனை பார்த்த ரசிகர்கள் "ஓ.... நாங்க பிரேக்கப் பண்ணிட்டோம் என்பதை இப்பற்றி கூட சொல்லலாமா" என கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் தோல்வியில் கிழிந்த பேண்டுடன் வந்த தமன்னா...! காதல் வலியை இப்படியும் அனுபவிக்கலாமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share