×
 

வட சென்னை 2 வேணுமா.. வெற்றிமாறன் கொடுத்த ஷாக் நியூஸ்.. ரசிகர்களின் ரியாக்ஷன்..!

வட சென்னை இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

கடலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு பின், வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை என்கின்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து தனது சினிமா கனவை நினைவாக்க சென்னையில் அடியெடுத்து வைத்தவர் தான் வெற்றி மாறன். இவர் 1999ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் இயக்குனர் பாலு மஹேந்திரன் இயக்கத்தில் உருவாகி  52 பாகங்களாக ஒளிபரப்பப்பட்ட "காதல் நேரம்" என்ற நிகழ்ச்சியில் அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். 

பின்பு, இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராகவும், அவரை தொடர்ந்து இயக்குநர் மஹேந்திராவின் 'ஜூலி கணபதி' மற்றும் 'அது ஒரு கனா காலம்' படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாபுரிந்தார். இதனை அடுத்து இயக்குநராக கலம் இறங்க நினைத்த வெற்றிமாறன் 2007ம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இதையும் படிங்க: சீறிப்பாய்ந்து வரப்போகும் 'வாடிவாசல்' திரைப்படம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!

அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் தனுஷை வைத்து  "ஆடுகளம்" என்ற திரைப்படத்தை 2011ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். இப்படம் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை வெற்றிமாறனுக்கு பெற்றுத் தந்தது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற பல வெற்றி படங்களை இயங்கியும் தேசிய நெடுச்சாலை 4, நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன் போன்ற படங்களை தயாரித்தும் தமிழ் திரையுலகில் இன்று முக்கிய இயக்குனராக இடம் பிடித்து இருக்கிறார். மேலும் இவர் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் உலகளவில் பிரபலமாகி ஆஸ்கார் விருதிற்கு நேர்முறையாக பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் பிரபல விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட  வெற்றிமாறனிடம் 'வட சென்னை 2' எப்பொழுது வரும்..? என உணர்ச்சி பொங்க ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் "வரும் சீக்கிரமாக வரும் என்றார். ஆனால், வடசென்னை 2 ஆரம்பிச்சா கூட இவ்வளவு பெரிய உற்சாகம் உங்களிடத்தில் இருக்காது, அதற்கு பின் குறைந்துவிடும் என நினைக்கிறேன்" என்று  கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் படம் வருவதை நினைத்து சந்தோஷப்பட்டாலும், அவர் கூறிய பதிலால் சற்று குழம்பி போய் அமர்ந்தனர். 
 

இதையும் படிங்க: ரோட்டர்டாம் படவிழாவில் விருதுபெற்ற BadGirl

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share