படம் பிளாப்பு ஆனா பாட்டு ஹிட்டு... சன் பிக்சர்ஸ் பதிவிட்ட சாதனை புகைப்படம்..!
நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நெல்சன் திலிப் குமாரின் திரை பயணத்தில் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம் தான் நடிகர் விஜயை வைத்து இயக்கிய "பீஸ்ட்" திரைப்படம். இந்த படம் படம் நடிகர் விஜயின் 65 ஆவது திரைப்படமாக கருதப்படுகிறது.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் குமார் இயக்கத்தில் அனிரூத்தின் மிரட்டும் இசையில் செல்வராகவன், ஷாஜிசன், விடிவி கணேஷ், அங்கூர் விகல், அபர்ணாதாஸ், சதீஷ் கிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் நடிகர் விஜயும் அவருடன் பூஜா ஹெக்டே ஜோடியாகவும் இணைந்து நடித்த திரைப்படம் தான் பீஸ்ட். கிட்டத்தட்ட ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 13 ஏப்ரல் 2022ம் ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள எல்லா திரையரங்குகளிலும் வெளியாகி ரூ.300 கோடிகளுக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இதையும் படிங்க: குல்லா போடும் ஆள் நான் இல்லை… விஜய்யை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!!
இது மட்டுமல்லாமல், கத்தி, மாஸ்டர், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிரூத் இத்திரைப்படத்தில் வந்த "அரபிக் குத்துப் பாடல்", "ஜாலியோ ஜிம்கானா", மற்றும் "பீஸ்ட் மோட்" ஆகிய பாடல்களை இசை அமைத்து அமர்க்களப்படுத்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இப்பாடல்களின் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன், கு.கார்த்திக் மற்றும் விவேக் ஆகியோர் எழுதியிருப்பது இப்படத்தின் மிகச் சிறப்பாக காணப்படுகிறது.
இப்படத்தின் கதைகளம் என்று பார்த்தால், காஷ்மீரில் எல்லை பாதுகாப்பில் சிறந்த வீரராக இருக்கும் வீரராகவன் செய்த சிறு தவறினால் அங்குள்ள குழந்தையின் இறப்புக்கு காரணமாகி விடுவார். இதனை அறிந்த விஜயராகவன் தனது ஆர்மி வேலையை விட்டு விலகி சென்னையில் பூஜா ஹெக்டேவை பார்த்து காதல் வயப்படுவார். பின்பு தனது பணிக்காக மாலுக்கு வரும் விஜய், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல, அங்கிருந்து மக்களை காப்பாற்ற போராடுவார். பின் அவர் எவ்வளவோ போராடியும் தீவிரவாதிகளின் தலைவரை அரசாங்கம் கடத்தல் காரர்கள் கையில் ஒப்படைக்க, மீண்டும் விஜயராகவன் எதிரிகளின் கோட்டைக்கே சென்று தீவிரவாதிகளின் தலைவரை சிறை பிடித்து வருவார். இப்படியாக இந்த கதைக்களம் அமைந்திருக்கும்.
இப்படி இந்த படத்தின் பாடலை கேட்டு படம் பார்க்க ஆசையாக வந்தவர்களுக்கு படம் ஏமாற்றம் கொடுத்தாலும் இப்படத்தில் வந்த ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையில் வெளியான "அரபிக் குத்து" பாடல் இதுவரை யூடியூப்பில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!