நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் "லுக் டெஸ்ட்" காட்சிகள் வெளியாகி உள்ளது..!
பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜயின் லுக் டெஸ்ட் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய் நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு.
இப்படத்தில் விஜயை பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர்.
இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!
இதனை தொடர்ந்து, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல், லியோ என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.
இப்படி 1992ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா பயணம் 2025ம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தில் தலைவராக இருக்கும் இனி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறியிருந்தார்.
அதற்கு இடையில் தற்பொழுது அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வந்தது. இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் சம்பளம் குடுக்க முடியாத சூழல் உருவானது.
இதனை அடுத்து, ஜனநாயகன் திரைப்படத்தை முடிக்க தீவிரம் காட்டிய தயாரிப்பாளர், படத்தின் உரிமையை தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ.80 கோடிக்கு விற்று உள்ளார்.
இதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதுடன் 'ஜனநாயகன்' படம் 2026ம் ஆண்டு 9ம் தேதி வெளியாகும் என அதிகார பூர்வ தகவல் வெளியானது.
இந்த சூழலில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம். கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நடிகர் விஜய் வீரராகவனாக நடித்த கதாபாத்திரத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோவை தான் தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டே நடனத்தை பார்க்க தயாரா..! 'ஜனநாயகன்' பட அடுத்த அப்டேட் இதோ..!