இணையத்தை கலக்கி வரும் விஜய்யின் சச்சின் பட unseen புகைப்படங்கள்..!
விஜயின் சச்சின் படத்தின் unseen புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் சச்சின்.
அப்போதே இந்த படம் ரூ.10 கோடி பட்ஜெட்டில் தயாராகி பயங்கர ஹிட் கொடுத்தது.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்த படத்தை ரீரிலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர்.
அந்த வகையில் இப்படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: கொஞ்சம் யோசிங்க விஜய்.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க..! இயக்குனர் மிஷ்கின் பேச்சு..!
தற்பொழுது வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு ஒரு கூட்டம் வந்தால் விஜயின் சச்சின் படத்தை காண பல கூட்டங்கள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும், இந்த படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின், படம் மிக அருமையாக உள்ளதாகவும், விஜயை இந்த படத்தில் இயக்குனர் அழகாக காண்பித்துள்ளதாகவும் முதல்முறையாக இப்பொழுதுதான் சச்சின் படத்தை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், விஜய் சினிமாவை விட்டு செல்லாமல் அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒருபடமாவது கொடுக்க வேண்டும் என கூறி கொண்டார்.
ரகுவரனுடன் நடிகர் விஜய் இருக்கும் அரியவகையான புகைப்படம் மக்களை அழ செய்துள்ளது.
ஜெனிலியாவுடன் அழகான கிளிக் எடுத்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் அஜித் சிறு குழந்தையுடன் குழந்தையாக மாறிய புகைப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நடிகர் விஜய் புல்லட்டுடன் இருக்கும் புகைப்படம் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும், விஜய் அழகாக குதிரையின் மேல் அமர்ந்து வலம் வரும் புகைப்படம் ஹிட் கொடுத்துள்ளது.
இந்த சூழலில் விஜயின் சச்சின் படத்தின் unseen புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "இப்ப வாயை தெறங்க ப்ரோ.. பெரிய சிஐடி சங்கர் இவரு"..! நடிகர் விஜயை சீண்டும் ஃப்ளூ சட்டை மாறன்..!