குட்டி தேவதையை கையில் ஏந்திய விஷ்ணு விஷால்..! தங்கை பிறந்த குஷியில் அண்ணன் கொண்டாட்டம்..!
விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
2009ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். இந்த படத்தை பற்றி நினைவு கூற வேண்டுமானால் காமெடி நடிகர் சூரியை தான் முதலில் நினைவு கூற வேண்டும். அந்த அளவிற்கு பரோட்டோ காமெடியில் இந்த படத்தை அழகாக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தார்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் கடைசியாக தனது காதலியுடன் வாழாமல் கபடி போட்டிகளத்தில் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவிற்கு படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தி இருப்பார்.
இதனை அடுத்து இவரது நடிப்பில் உருவான அருமையான திரைப்படம் "குள்ளநரி கூட்டம்". இந்த படத்தில் தனது காதலிக்காக போலீசாக மாற நினைக்கும் விஷ்ணு ஷிஷால், தனது அப்பாவுக்கு தெரியாமல் போலீஸ் ட்ரைனிங் சென்று அங்கு நன்றாக தனது திறமையை காண்பித்து இருப்பார்.
ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் வேறு சிலரை வேலைக்கு எடுக்கும் செய்தி தெரிந்த விஷ்ணு, அவரது நண்பர்களுடன் இணைந்து ஊழல் அதிகாரிகளை மீடியாக்கு முன்பாக நிறுத்தி மீண்டும் தனது வேலையை வாங்குவர். ஆனாலும் இப்படத்தில் இவரது காதல் போஷன் அல்டிமேட்டாக இருக்கும். இந்த படமும் வெண்ணிலா கபடி குழுவும் இவரை மக்கள் மனதில் கதாநாயகனாக பதியவைத்த படம் எனலாம்.
இதையும் படிங்க: பிராமண சர்ச்சை: குடும்பத்திற்கு வந்த கொலை மிரட்டல்... இயக்குநர் அனுராக் காஷ்யப் எடுத்த முடிவு..!
இப்படி இருக்க, இவரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்க வைத்த படம் என்றால் மூன்று படங்களை சொல்லலாம். அதில் முதலாவது போட்டோ எடுத்தால் மறித்து போவார்கள் என நம்பும் ஊர்மக்களை ஏமாற்றி அந்த ஊர் தலைவரின் மகளை திருமணம் செய்யும் படம் தான் "முண்டாசுப்பட்டி". இதனை அடுத்தது அனைவரது மனதிலும் மிகப்பெரிய திகிலை ஏற்படுத்திய அட்டகாசமான படமான "ராட்சசன்" திரைப்படம். மூன்றாவதாக மனைவியுடன் மல்யுத்தமான குஸ்தி போடும் படமான "கட்டா குஸ்தி". இந்த மூன்று படங்களும் மக்கள் மனதில் அவரை நிலைநிற்க செய்தது.
இந்த சூழலில் விஷ்ணு விஷால் இதுவரை, வெண்ணிலா கபடி குழு, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, தாக்க தாக்க, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், இன்று நேற்று நாளை 2, மோகன் தாஸ், காடன், கட்டா குஸ்தி, ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்), லால் சலாம், போடா ஆண்டவனே என் பக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இப்படி சினிமாவில் கலக்கி வரும் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருந்தபோதிலும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணங்களால் விஷ்ணுவும், ரஜினியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்குவாஷ் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஷ்ணு விஷால். இவர்களது பெயருக்கு ஏற்ப இவர்களது ஜோடி பொருத்தமும் அமோகமாக இருந்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரது காதலுக்கு அடையாளமாக இவர்களுக்கு இன்று மகள் பிறந்திருக்கிறாள். அதுதொடர்பான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த விஷ்ணு அதில், 'எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். ஆர்யன் அண்ணன் ஆகிவிட்டான். இன்று எங்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள். அந்த நாளில் எங்கள் குடும்பத்தில் தேவதை பிறந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் என் மகளுக்கு தேவை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கும் அவரது மகளுக்கும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: உங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா.. நாங்க இருக்கோம்..! மீண்டும் வருகிறது 'சொல்வதெல்லாம் உண்மை'..!