×
 

இளையராஜா செய்த தரமான சம்பவம்... வீடு தேடி வந்த ஸ்டாலின்!!

இளையராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சிம்பொனி நிகழ்வுக்காக பாராட்டி பரிசையும் வழங்கி வாழ்த்தியுள்ளார். 

இசை சக்ரவர்த்தி இசைஞானி இளையராஜாவின் பாட்டுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவரையும் தனது இசையால் மயங்க வைக்கும் இளையராஜாவுக்கு ஃபேன்பேஸ் எப்பொழுதும் உண்டு. இசையில் தனக்கு என தனி சாம்ராஜ்ஜியத்தையே படைத்துள்ள இளையராஜா, இந்தியாவை தாண்டி லண்டனில் எண்ட்ரி கொடுக்கிறார்.

அதாவனி தனது இசையின் சிம்பொனி அரங்கேற்றத்தை லண்டனில் நடத்துகிறார். இசையில் ஆசியாவிலேயே யாரும் செய்யாத இந்த சாதனையை இளையராஜா செய்து முடிப்பதால் அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர். நாளை லண்டனில் நடைபெறும் சிம்பொனி இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

இந்த இளையராஜாவின் வீட்டுக்கு திடீரென விசிட் அடித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது வீட்டிற்கே சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வுக்காக பாராட்டி பரிசையும் வழங்கி வாழ்த்தியுள்ளார். 

இதையும் படிங்க: கையை கடித்தும் பெண் காவலரை விடாத காமூகன்... தர்ம அடி கொடுத்த மக்கள்... கண்டித்த பாஜக அண்ணாமலை!

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது,  ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார்.  நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.  

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.  உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார். மேலும் இசைத்துறையில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் இளையராஜாவுக்கு அரசு தரப்பிலும், தலைவர்கள் தரப்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இருவரின் இந்த சந்திப்பில் ஸ்டாலினின் பழைய நினைவுகளை இளையராஜா பகிர்ந்து கொண்டதாக கூறபப்டுகிறது. இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, வெளிநாடு இசை கச்சேரிகளை அரங்கேற்றி வருகிறார். இது தவிர சிம்பொனி இசை நிகழ்விலும் பங்கெடுத்து வருகிறார். தமிழ்நாட்டை தாண்டி இளையராஜாவின் புகழ் லண்டன் வரை சென்றுள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசால் அச்சம் - அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share