×
 

முதலமைச்சர் பேச்சுக்கு கொந்தளித்த பா.ரஞ்சித்...! அப்படி என்ன தான் சொல்லிட்டாரு நம்ம முதல்வர்..!

தலித் மக்களின் மீதான வன்முறையை ஒப்புக்கொள்வீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ரஞ்சித கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக, ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து,  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவ்வப்போது "உங்களில் ஒருவன்" என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்தித்து, தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். இந்த நிலையில், தற்போது தொண்டர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்வரை, சரமாரியாக கேள்விகள் கேட்டு தனது x தளத்தில் பதிவிட்டு, அப்படி முதல்வர் என்னதான் சொன்னார்? என, அனைவரையும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். 

சமீபத்தில் முதலமைச்சர் பிரிவு வெளியிட்டுள்ள காணொலியில், கூட்டணி கட்சிகளின் கருத்து வேறுபாடு, டெல்லியில் ஏற்பட்ட தோல்வி, பட்ஜெட் முதலானவைகளை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இப்போது இருக்கும் இளையதலைமுறையினர் தன்னை "அப்பா" என அழைப்பது மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவும், காலப்போக்கில் மற்ற பொறுப்புகளில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் அப்பா என்ற உறவு மாறாது. அதுமட்டும் இல்லாமல் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை பிரிக்கிறார்கள். இருப்பினும் தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் இருக்கிறது, அதனை கண்டிப்பாக செய்வேன் என கூறினார்.

இதையும் படிங்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி.!

இந்த நிலையில், முதலமைச்சரின் காணொளியை தனது x தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், "தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீரா??? மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களே!!

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி" என்று மிகவும் காட்டமாக குறிப்பிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தொடரும் இலாகா பறிப்பு... திமுக ஆட்சியில் அதிக முறை பந்தாடப்பட்ட ராஜகண்ணப்பன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share