சென்னைக்கு வந்துடுச்சு ஊட்டி..கண்களுக்கு விருந்தாக மலர் கண் காட்சி.. தயாராகி வரும் செம்மொழிப் பூங்கா..!
சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்த மலர் கண் காட்சி 2-ந்தேதி தொடங்க உள்ளது
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா தான் செம்மொழிப் பூங்கா. 2010 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதியால் திறக்கப்பட்டது .ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நிகராக சுமார் 800 விதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது .ஊட்டியை போலவே இங்கும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது அங்கு செல்ல முடியாதவர்கள் செம்மொழி பூங்காவுக்கு வந்து பூத்துக் குலுங்கும் மலர்களை கண்குளிர கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு செம்மொழி பூங்கா தயாராகி வருகிறது வரும் ஜனவரி 2-ந்தேதி செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.
பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: மயிலு பெத்த மகளா இது? ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் ஜான்வி கபூர்!
இந்த மலர் கண்காட்சியில் பெட்டூனியா, ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 46 வயதில் இது தேவையா? பூமிகா வெளியிட்ட நீச்சல் குள புகைப்படங்கள்!