×
 

கேங்ஸ்ட்டராக களமிறங்கும் நடிகர் செந்தில்... ஆரம்பமே அமர்க்களமாக போகுது..! காமெடி டூ கேங்க்ஸ்ட்டர்..!

காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் செந்தில் முதன் முதலில் கேங்க்ஸ்ட்டராக அறிமுகமாகும் செய்தியை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். 

கடவுளில் ராமன் என்றால் சீதை இருப்பது போல், கார்டூனில் "டாம் அண்டு ஜெர்ரி" என்றால் பூனை எலி இருப்பது போல், தமிழ் திரையுலக காமெடி என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது கவுண்டமணி செந்தில் தான். இவர்கள் இருவரின் கதாபாத்திரம் எப்படி இருக்குமானால் "அவர் என்ன அடிக்க என்ன அவர் அடிக்க" என்பதை போல் கடைசி வரை செந்தில் கவுண்டமணியிடம் அடிவாங்கிய படியே இருப்பார். இவர்கள் நடிப்பில் உங்களுக்கு பிடித்தது எது என்று கேட்டால் அனைவருக்கும் நிலைக்கு வருவது "பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா" என்ற ஒற்றை வார்த்தை அதைவிட கரகாட்டக்காரன் படத்தில் "ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க என கேட்க அதுதானே இது" என்று சொல்லி அடிவாங்கும் காட்சிகள். இதனை மறக்கவே முடியாது. 

இப்படி இருக்க வில்லனாக நடித்த ஆனந்த் பாபு, மொட்டை ராஜேந்திரன் எல்லாம் தற்பொழுது காமெடியனாக மாற, காமெடி செய்து கொண்டு இருந்த நடிகர் சூரி, யோகிபாபு, சந்தானம் என அனைவரும் கதாநாயகனாக மாறி வருகின்றனர். இந்த வரிசையில்; முரளி பிரபாகரன் தயாரிப்பில், சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாக காத்திருக்கும் புதிய படத்தில் நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜை உடன் துவங்கியது.

இதையும் படிங்க: கவுண்டமணியை வம்பிழுக்க வடிவேலு என்ன செய்வார் தெரியுமா..! நடந்ததை உடைத்த இயக்குநர்..!

`

இந்த படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிய சாய் பிரபா மீனா, ஒரே ஒரு  நாற்காலி அதில் அமரப்போகும்  தலைவன் யார்..? என்ற போட்டி நான்கு கேங்ஸ்டர் மற்றும் அவர்கள் குழுக்களிடையே நடக்கிறது. இதில் ஜெயிக்க அவர்கள் என்னென்ன செய்கிறார். கடைசியில் அந்த நாற்காலியில் யார் அமர்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத வகையில் படம் ஆக்ஷன் கலந்த திரில்லிங்காடு இருக்கும் எனவும் முதற்கட்டமாக இந்த படம் ஆந்திரா, கோவா போன்ற இடங்களில் எடுக்கப்படும். பின் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறினார்.  மேலும் இந்த படத்தில் செந்தில் உடன் கூல் சுரேஷ், எம்.எஸ். ஆரோனி, மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தலைவரா..! ரீரிலீசில் பட்டைய கிளப்ப தயாராகும் பாட்ஷா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share