பாலுமகேந்திராவை புகழ்ந்து தள்ளிய இளையராஜா..! அவரும் சைலன்ட் அவர் படமும் சைலன்ட் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி..!
பாலுமகேந்திராவை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட பாலுமகேந்திராவை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை குறித்து கூறி மகிழ்ந்தனர்.
பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க பல கிளாசிக் படங்களை கொடுத்தவர். இவர் வண்ண வண்ண பூக்கள், சந்தியா ராகம், வீடு ஆகிய படங்களை இயக்கியதற்காக மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லுரியில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பாலுமகேந்திராவின் நினைவு நாள் என்பதால் 'பாலுமகேந்திராவை கொண்டடுவோம்' என்ற பெயரில் அவருடைய படங்களும் அதற்குண்டான உரையாடல்களும் நான்கு நாட்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது பேசிய இயக்குனர் வெற்றி மாறன், பாலுமகேந்திரா சாரின் கதாபாத்திரம் மற்றும் வசனங்கள் ஆகியவற்றில் ஒரு 'சைலன்ஸ்' இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நான் அவரிடம் வேலை செய்த போது, படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகள் வசனம் பேச பிராம்ப்டிங் பண்ணும் போது, வேக வேகமாக பேசிவிடுவேன். அதற்கு அவர் மெதுவாக பேசு என்பார். குறிப்பாக இங்கே திரையிடப்பட்ட மறுபடியும், வீடு, சந்தியா ராகம் ஆகிய படங்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க வைக்கிறது. இன்று திரையிடப்பட்ட மூடுபனி படத்தின் ஆரம்ப காட்சிகளை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது என்றார்.
இதையும் படிங்க: சர்வதேச விழாவில் "நெட்பேக்" விருதை தட்டிச் சென்ற "பேட் கேர்ள்"..
இவரைத்தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, இருக்கும் இயக்குநர்களில் மனதுக்கு பிடித்த இயக்குநர் என்றால் அது பாலுமகேந்திரா தான். ஏனெனில் அவர் எடுக்கும் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையே உள்ள கால இடைவெளியில் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன். ஆனால் மற்ற படங்களுக்கு இசையமைத்ததை விட, பாலுமகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும் போது இருக்கும் சுதந்திரம், இனம்புரியாத சந்தோஷத்தை தரும் என்றார். இந்த நிகழ்வில் நடிகைகள் அம்பிகா, பூர்ணிமா ஜெயராம், ரோகிணி, 'நிழல்கள்' ரவி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அஜயன்பாலா மற்றும் இளையராஜா ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: ஏற்காட்டிற்கு அழைத்த ஹீரோ... என் வாழ்க்கையே நாசமா போச்சு... நடிகை ஆவேசம்!