×
 

வைகைப்புயல் வடிவேல்- பி டி ஆர் திடீர் சந்திப்பு..! வடிவேலுவின் தீவிர ரசிகன் என புகழாரம்

விமான நிலையத்தில் வைகைப்புயல் வடிவேலுவைச் சந்தித்ததாக திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 விமான நிலையத்தில் வைகைப்புயல் வடிவேலுவைச் சந்தித்ததாக திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. திரையுலக ரசிகர்களால் வைகைப்புயல் என அழைக்கப்படும் வடிவேலு, மீம்ஸ் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வடிவேலு அதிக அளவிலான படங்களில் நடிக்காவிட்டலும், இன்றும் சோசியல் மீடியாவில் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சாமானியர்கள் மட்டுமல்ல வடிவேலுவின் காமெடிக்கு பல முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களாக இருப்பது உண்டு. அந்த வகையில் தான் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வடிவேலுவின் ரசிகன் என்பதை ஓபனாக தெரிவித்துள்ளார். 

தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்வுகள், அரசின் அதிரடி அறிவிப்புகள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மதுரை மண்ணின் மைந்தனான பிடிஆர், வைகைப் புயல் வடிவேலுவைச் சந்தித்தது தொடர்பாக பதிவிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: TVK விஜய்..அஜித் Car விபத்து ..வடிவேலு கொடுத்த ஷாக்கிங் பதில் ..!

தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். pic.twitter.com/6pNlquAeNl

— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) February 6, 2025

விமான நிலையத்தில் வடிவேலுவுடன் இருக்கும் போட்டோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தன்னிகரற்ற நகைச்சுவை திரைக்கலைஞர், இன்றளவும் மீம்(Meme) உலகின்  முடி சூடா மன்னனாக விளங்கும் எங்கள் மதுரை மண்ணின் மைந்தன் வைகைப்புயல் வடிவேலு அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து உரையாடியதில் நானும் அவரது ரசிகன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: பாலாபிஷேகமே ஓவர்... பீர் அபிஷேகம் எல்லாம் அட்டூழியத்தின் உச்சம்... எல்லை மீறிய அஜித் ரசிகர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share