×
 

டாஸ்மாக்கில் கை வைத்த ED.! பகீர் கிளப்பும் தில்லாலங்கடி: கூண்டோடு சிக்கும் திமுக புள்ளிகள்..!

ஒவ்வொரு கேஸ் பெட்டிக்கும் 100 ரூபாய் வரை கமிஷன் என கோடிக்கணக்கில் கொடுக்கப்படுவதாக பகீர் கிளப்பப்படுகிறது.

முதலில் கரூரை மையப்படுத்தி அமலாக்கத்துறை களமிறங்கியதும் பழைய மோசடி வழக்கின் தொடர்ச்சியாகத்தான் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், திடீர் ட்விஸ்ட்டாக சென்னையில் டாஸ்மாக் நிறுவன தலைமை நிறுவனத்திற்குள் புகுந்து சோதனை நடத்தியபோது தான் வேறொரு வழக்கு என்பது தெரிய வந்தது.

சென்னை, எழும்பூரில் டாஸ்மாக்  தலைமையகம் தொடங்கி, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது விற்பனை செய்யப்படும் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு விரிவடைந்தது. அம்பத்தூரில் உள்ள அரசு மதுபான குடோனிலும் சோதனை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மதுபானங்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது, எங்கு அனுப்பி வைக்கப்படுகிறது? அதன் கணக்கு, வழக்குகள் என்ன என்ற விவரங்களை ஆய்வு செய்தது.

இதையும் படிங்க: டாஸ்மாக் நிர்வாகத்தின் கள்ள ஒப்பந்தம்… ரூ.50000 கோடி மோசடி..? ED ரெய்டின் பகீர் பின்னணி..!

அந்த வகையில் தியாகராய நகரில் இயங்கி வரும் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டிலரீஸ்  பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ஆர்.வாசுதேவன் என்ற சிவப்பிரகாசம் என்பவர் நடத்திவரும் கால்ஸ் நிறுவனம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஜெயமுருகன் நடத்தி வரும் எஸ்.என்.ஜே நிறுவனங்களில் சோதனை நடந்து வருகிறது. அதாவது டாஸ்மார்க் நிறுவனம் கொள்முதல் செய்யும் மதுபானங்கள் பெரும்பாலும் இந்த மூன்று நிறுவனங்களில் இருந்துதான் அதிகமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு என இருந்த புகாரில்தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்த தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையும், மதுபான கொள்முதல் முறைகேடு என அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது செந்தில் பாலாஜிக்கு கடும் நெருக்கடியாக மாறி உள்ளது.

அத்தோடு ரெய்டில் இருக்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அக்கார்டு நிறுவனம் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்பதால் இந்த திடீர் சோதனை அவருக்கும் தலைவலியாக மாறி உள்ளது. ஏற்கனவே ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அதாவது கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களுக்காக உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து டாஸ்மார்க் நிறுவனம் கமிஷன் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

48 குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய கேஸ் ஒன்றுக்கு 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உற்பத்தி நிறுவனங்கள் டாஸ்மாக்கிற்கு கமிஷனாக கொடுப்பதாக சொல்லப்படுகிறது. டாஸ்மாக் கமிஷனாக கொடுத்து மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவு மதுபானங்களை விற்று, கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரெய்டு நடவடிக்கையில் சிக்கிய எஸ்.என்.ஜே நிறுவனம் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு 10 லட்சம் கேஸ் பெட்டிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கேஸ் பெட்டிக்கும் 100 ரூபாய் வரை கமிஷன் என கோடிக்கணக்கில் கொடுக்கப்படுவதாக பகீர் கிளப்பப்படுகிறது.

இதே போல திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் நடத்திவரும் அக்கார்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 6 லட்சம் கேஸ் பெட்டிகளை டாஸ்மாக்கிற்கு விற்பனை செய்கிறது என்கிற நிலையில் ஒவ்வொரு கேஸ் பெட்டிக்கும் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், குளறுபடியாகவும் இருப்பது அமலாக்கத்துறைக்கு இன்னும் சந்தேகம் வலுத்துள்ளது. கமிஷன்களைப் பெற்றுக் கொடுக்கும் புரோக்கர் போல எஸ்.என்.ஜெ நிறுவனம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுபான நிறுவனங்களிடமிருந்து கமிஷன் வாங்கி, சேர வேண்டிய இடத்தில் ஒப்படைப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. வருமானத்தை மறைத்து, முறைகேடு செய்ததாக மது உற்பத்தி நிறுவனமான கால்ஸ் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது என்கிற நிலையில் தற்போதும் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ளது.

வருமானத்தை மறைத்து, சட்ட விரோத பண பரிமாற்றம் எதுவும் நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் கால்ஸ் நிறுவனம் மீது அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கிற்கு கமிஷன் கொடுக்கும் நிறுவனங்களில் பட்டியலில் கால்ஸ் நிறுவனமும் இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஆவணங்களையும்  ஆராயத் தொடங்கி இருக்கிறது அமலாக்கத்துறை. இதனிடையே விழுப்புரத்தில் எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்து டாஸ்மாக்கிற்கு எவ்வளவு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என சோதனையை தீவிர்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே கோவையில் உள்ள சிவா டிஸ்டில்லரீஸ் என்ற மது ஆலையிலும் சோதனை நடந்து வருகிறது. மது உற்பத்தி நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வைத்த குறி என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரெய்டில் வசமாகச் சிக்கிய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்: சிக்கிய ஆதாரங்கள்- கொத்தாக அள்ளிய ED ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share