×
 

பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் ED SHEERAN இசை நிகழ்ச்சி

உலகப் புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசைக்கலைஞரான ED SHEERAN-ன் இசை நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 5-ந் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

மைக்கேல் ஜாக்சனுக்குப் பிறகு இந்தியாவில் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ள மேற்கத்திய இசைக்கலைஞர் என்றால் அது பிரிட்டனைச் சேர்ந்த ED SHEERAN தான். அவரது SHAPE OF YOU என்ற பாடல் இந்தியாவில் அதிக முறை கேட்கப்பட்ட ஆங்கிலப்பாடல் என்று SPOTIFY நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. அவரது சமீபத்திய இசை ஆல்பமான SUBSTRACT மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்தியாவின் 6 நகரங்களில் இசை சுற்றுப்பயணம் ஒன்றினை தொடங்கி உள்ளார் ED SHEERAN. இன்று அதாவது ஜனவரி 30-ந் தேதி புனே நகரிலும், பிப்ரவரி 2-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமேஜிராவ் ஸ்டூடியோவிலும், பிப்ரவரி 5-ந் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ திடலிலும், பிப்ரவரி 8-ந் தேதி பெங்களுரில் உள்ள என்ஐசிஇ மைதானத்திலும், பிப்ரவரி 12-ந் தேதி மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கிலும், பிப்ரவரி 15-ந் தேதி டெல்லியிலும் அவர் இசைநிகழ்ச்சிகள் நடத்த உள்ளார். இந்திய சுற்றுப்பயணத்திற்கு அவர் வைத்துள்ள பெயர் கணித சுற்றுப்பயணம் என்பதாகும் (Mathematics Tour). 

இதையும் படிங்க: இனி கண்ணாடி பாலம் பார்க்க கன்னியாகுமரி போக வேண்டாம், சென்னையிலேயே...

சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் முதலே டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது. டிக்கெட்டின் விலை 3 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. HSBC வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 10 சதவித தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கினால் மேடைக்கு அருகே முன்புறத்தில் இருக்கைகள் போடப்பட்டிருக்கும். குளிர்பானங்கள், குடிநீர் போன்ற வசதிகள் தனித்தனியே செய்து தரப்படும். 3 ஆயிரம் ரூபாய் டிக்கெட் பெற்றால் மேடையை விட்டு தள்ளி இருக்கைகள் அமையப் பெற்று இருக்கும்.

இசைநிகழ்ச்சியில் அவரது சமீபத்திய ஆல்பமான SUBSTRACT ஆல்பத்தில் இருந்து பாடல்களும் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற அவரது இசைநிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நடப்பாண்டில் இந்தியாவில் 6 நகரங்களில் அவர் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சென்னை ரசிகர்களே ED SHEERAN இசைநிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் தயாரா?...

இதையும் படிங்க: சக்தி திருமகனமாக மாறிய விஜய் ஆண்டனி... சிவகார்த்திகேயனுக்காக பராசக்தியை விட்டுக் கொடுத்தாரா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share