எம்புரான் படத் தயாரிப்பாளருக்கு சிக்கல்..! சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!
அளவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்குச் சொந்தமான, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் பண்ட் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அளவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கும்பமேளா கண்ணழகிக்கு துயரம்.! மோனலிசாவை மோசம் செய்த காம இயக்குநர்.! குமுறி, குமுறி அழுத அழகி.!
எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. இதையடுத்து படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகளை நீக்கியது படக்குழு.
இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் .
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, அபிமன்யு சிங் உள்பட பலர் நடித்து, கடந்த 27ம் தேதி திரைக்கு வந்த படம் ‘எல் 2:எம்புரான்’. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படைத்திருக்கிறது. இதுவரை ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. இதையடுத்து அதற்கு பொறுப்பேற்று, உடனடியாக அக்காட்சிகளை நீக்குவதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்குச் சொந்தமான, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் பண்ட் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அளவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.