×
 

இனிமே அது தேவையில்ல....அஜித்தை தொடர்ந்து நயன்தாராவும் ரசிகர்களுக்கு போட்ட கண்டிஷன்!!

என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா கூறியதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா கூறியதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா ரஜினி, சரத்குமார், அஜித், விஜய், தனுஷ் என உச்சக்கட்ட நடிகர்களுடன் நடித்து  புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வரும் நயன் தாரா தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.  

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் அவரே முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தியதன் மூலம் நயன் தாராவின் மார்க்கெட்டும் உயர தொடங்கியது. நானும் ரவுடி தான் படத்தில் இன்னசென்டாக நடித்த இவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் சோலோ கேரக்டர்களின் நடித்து உச்சக்கட்ட உயரத்துக்கு போன நயன் தாரா இந்தியில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து அசத்தினார். 

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?

நானும் ரவுடி தான் படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிரார். நயன் தாரா நடிப்பில் அண்மையில் வெளிவந்த அன்னப்பூரணி படத்தில் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என டைட்டில் வைத்து படத்தில் பெயரிடப்பட்டது. தென்னிந்திய குயின் என நயன் தராவை கொண்டாடும் ரசிகர்கள் அவரது கம்பீரமான நடிப்புக்காக லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைத்தனர். 

இந்த நிலையில், அவர் தற்போது ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது.. ஒரு நடிகையாக மட்டுமல்ல.. ஒரு தனிநபராகவும் எனது அடையாளமே எனக்கு போதும் என என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் அஜித் தன்னை தல என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார். இப்போது நயன் தாராவும் தனக்கான லேடி சூப்பர் ஸ்டார் பெயரை தவிர்க்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலில் ஜோதிகா... இப்போ நயன்தாரா...! மும்பையில் இந்த ஹீரோயினா...!!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share