படக்குழுவுக்கு அஜீத் போட்ட அதிரடி ரூல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு அஜித் போட்ட உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மேலும் இதில் பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படம் 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளை கடந்தது. இரண்டு வாரங்களில் 3.5 கோடி பார்வையாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் பட வெளியீடுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து ரிலீஸ் செய்து படக்குழு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் அஜித் தற்போது படத்தின் அப்டேட்களை வெளியிடவேண்டாம் என உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பேரு வச்சதே அஜித்தான்... வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி!!
அஜித் தற்போது பிரேசிலில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தாலும், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் குறித்து அவ்வப்போது விசாரித்து வருகிறார். இதனிடையே அஜித் தரப்பில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 27 ஆம் தேதி வரை குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியிடக் கூடாது என அஜீத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி வரும் 27ஆம் தேதி, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் பாகம் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் அதுவரை குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் எதுவும் ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் படம் குறித்த அப்டேட்களை நிறுத்தப்போவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் இரண்டாவது பாடலை வரும் 28 ஆம் தேதிக்கு மேல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இதுதாண்டா OG சம்பவம்… தெறிக்கவிட்ட குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!!