தடையை நீக்கிய நீதிமன்றம்... வீர தீர சூரன் படத்தை வெளியிட அனுமதி!!
விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டதால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விக்ரம் இருந்து வருகிறார். இவர் அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை என்றே கூறலாம். இவர் படத்திற்காக பல சிரமங்களை சந்தித்துள்ளார். சில படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து ஏற்றியுள்ளார். அதேபோல் காசி படத்திற்காக அவர் கண்களை மேலே வைத்தவாறு இருந்ததால் பல சிரமங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதுவாகவே எளிதாக மாறிவிடக்கூடிய அளவிற்கு திறமை மிகுந்தவர் விக்ரம்.
அவர் நடித்த பிதாமகன் படம் அவருக்கு தேசிய விருதினை பெற்று தந்தது. அதேபோல் தில், தூள், சாமி, ஜெமினி ஆகிய படங்கள் மெகா ஹிட் படங்களானது. இதனால் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் அவரது படங்களுக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். விக்ரம் கஷ்டப்பட்டு நடித்த படங்களில் சில வருடங்களுக்கு முன் வெளியான தங்கலாம் படமும் ஒன்று. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து அவர் நடித்த ஸ்கெட்ச், இருமுகன் போன்ற படங்களும் ஹிட் ஆகவில்லை. இதனிடையே அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: விக்ரம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்... மலையாள நடிகர் புகழாரம்!!
இதில் விக்ரமின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் சித்தா படத்தின் மூலம் மக்களை கவர்ந்த அருண்குமாருடன் இணைந்து வீர தீர சூரன் என்று படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது.
இப்படியான நிலையில் படத்தை, நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வீர தீர சூரன் படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ஆவலாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். பல தியேட்டர்களில் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இருதரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே 4 வாரங்கள் தடை விதித்திருந்த நிலையில், தடை நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்ரம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்... மலையாள நடிகர் புகழாரம்!!