×
 

நயன் – தனுஷ் இடையே தொடரும் சர்ச்சை… இறுதி தீர்ப்பு எப்போ தெரியுமா?

வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை நயன்தாரா சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி, கஜினி, பில்லா மற்றும் யாரடி நீ மோகினி போன்ற படங்களுக்கு பிறகு திரையுலகில் பிரபலமானவராக வலம் வந்தார்.

அவரது பிறந்த நாளையொட்டி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா பியாண்ட் த பேரிடேல் என்ற ஆவணப்படம் வெளியானது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாணத்திற்கு முன்பு அவர்களின் கல்யாணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படமா எடுப்பதாக கூறப்பட்ட நிலையில் அது பின்னர் நயன்தாராவின் பயோகிராஃபியாக மாறியது. நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் விளக்கும் வகையில் வெளியான நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இதையும் படிங்க: Dabba Cartel... இந்தியில் ஒரு Breaking Bad..!

இதனால், தனுஷூக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான நட்புறவு முறிந்தது. விக்னேஷ் சிவனும் எக்ஸ் தளத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டார். தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருந்த பரபரப்பு நயன்தாராவின் ஆவணப்படத்தில் பெரிதாகவும் ரசிகர்களை கவரவில்லை என்றே கூறலாம். நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் பல்வேறு கிண்டல்களுக்கு ஆளானார் விக்னேஷ் சிவன்.

தனுஷை எதிர்த்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதற்கு எதிர்வினைகள் கடுமையாக இருந்ததால் அந்த பதிவினை உடனடியாக நீக்கினார். பின்பு நயன்தாராவும் இதுதொடர்பாக அறிக்கையும் வெளியிட்டார். இவ்வாறாக இருதரப்பும் விளக்கம் அளித்தாலும் சட்டரீதியான பிரச்னைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இதன் இறுதி விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share