×
 

25-என பொய் சொன்ன 38! 17 வயது கல்லூரி மாணவிக்கு காதல் வலை.. போக்சோவில் தட்டிதூக்கிய போலீஸ்..

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டிய நபரை செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் அவரது மொபைல்போனில் 'ஸ்னாப்  சேட்'  (snapchat) என்ற செயலி மூலம் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையை சேர்ந்த 25 வயது வாலிபர் என கூறி பேசி உள்ளார். சமூக வலைதல  கணக்கில் இருந்த புகைப்படத்தை கண்ட பெண்ணும் அவருடன் தொடர்ந்து பேச துவக்கி  தனது புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். நாளடையில் நட்பாக பேசியது காதலாக மாறியது. அந்த நபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை  கூறியதால் அந்த பெண்ணும் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி உள்ளார். 

ஆனால் போனில் பேசுவதும், சேட் செய்வதுமாக இருந்த அந்த நபர் ஒரு முறை கூட தனது முகத்தை காட்டவில்லை. நாளடைவில் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த இளம் பெண் வீடியோ காலில் வரும் படி அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்த நிலையில்  இளம்பெண் பேச்சை துண்டித்துளார். அப்போது அந்த நபர் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி அப்பெண் அழுதுள்ளார். 

இதையும் படிங்க: மீண்டும் நான்சென்ஸ்... சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. 11ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது.!

உடனே மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.மாணவி கொடுத்த சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை,கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பதும், அவர் வயது 38 என்பதும்,  தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாகவும், அதேவேளையில் பகுதி நேரமாக  'பைக் டாக்ஸி' ஓட்டி வந்ததும் தெரிந்தது.

அவரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

இதையும் படிங்க: காதலனை போக்சோ வழக்கில் சிக்க வைத்த பெண்ணின் குடும்பம்...விடுதலை செய்த உயர் நீதிமன்றம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share