×
 

க்ளாடியேட்டர்-2... யாருங்க அந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்.. ஜுனூன் தமிழில் மொழிமாற்றம் செய்து சொதப்பல்..!

க்ளாடியேட்டர்-2 படத்தின் தமிழாக்கம் மிக மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில், ரஸ்ஸல் க்ரோ நடிப்பில் 2000-ம் ஆண்டில் வெளிவந்த க்ளாடியேட்டர் படத்தை உலக சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். EPIC என்று ஆங்கிலத்தில் கூறுவார்களே அதற்கு இணையாக அந்த படம் மேக்கிங்கிலும், நடிப்பிலும், வசூலிலும் நம்பர் ஒன்னாக திகழ்ந்தது. சிறந்த படம், சிறந்த நடிகர் என மொத்தம் 5 ஆஸ்கர் விருதுகளையும் அந்த படம் வாங்கி குவித்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தின் Sequel எடுக்கப் போகிறார்கள் என்றதுமே முதல்பாகத்தின் மேன்மைக்கு ஈடுகொடுக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். 

ஆனால் அதற்கு சிறிதும் சேதாரம் விளைவிக்காமல் இந்த வயதிலும் இயக்கத்தில் தானொரு அசகாய சூரன் தான் என நிரூபித்து இருப்பார் ரிட்லி ஸ்காட். திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு அற்புதம் க்ளாடியேட்டர்.. இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் ப்ரைம் அமேசான் ஓடிடி தளத்தில் வாடகைக்கு இந்த படம் வெளியானது. நேற்று இரவு முதல் வாடகை நீக்கப்பட்டு எல்லோரும் பார்க்க கூடிய வகைக்கு அது மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட இன்னபிற மொழிகளிலும் இப்படத்தை பார்க்கும் வசதி உள்ளது.

இதையும் படிங்க: நடிகை செளந்தர்யா மரணத்திற்கு ரஜினி நண்பர் காரணமா?... உண்மையை உடைந்த கணவர்...! 

இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. க்ளாடியேட்டர்-2 படத்தின் தமிழாக்கம் யார் செய்தது என்று தெரியவில்லை. அதுபற்றிய தெளிவான விவரம் ஏதும் ப்ரைம் அமேசான் தளத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வளவு மோசமான ஒரு மொழிபெயர்ப்பை இதுவரை யாரும் கேட்டிருக்க முடியாது. 1990-களில் தூர்தர்ஷனில் ஜுனூன் என்றொரு இந்தி நாடகம் ஒன்றை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருப்பார்கள். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்ற எந்த இலக்கண வரம்பும் இல்லாமல் இந்தியில் உள்ளதை அப்படியே வாக்கியமாக எழுதி பேசியிருப்பார்கள். அது கேட்பதற்கு கொச்சைத் தமிழில் பேசுவதை போலவும், முன்னும் பின்னுமாக சொற்கள் பின்னப்பட்டது போலவும் இருக்கும். 

தொழில்நுட்பமும், கல்வியும் வளர்ந்து விட்ட இந்தநாளில் கூட 35 ஆண்டுகளுக்கு முந்தைய அதேபாணியில் மொழிமாற்றம் செய்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. தமிழில் பிறமொழியும் தெரிந்தவர்கள் யாரேனும் இதனைக் கேட்கும்போது , சே.. இவ்வளவுதானா தமிழ்மொழி என்று எள்ளி ஏளனம் செய்யும் அளவுக்கு அது உள்ளது. 1800 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளது. பலகோடி ரூபாய் கொடுத்து ப்ரைம் அமேசான் தளம் அதனை வாங்கி உள்ளது. இதுநாள்வரை பணம் கொடுத்து பலரும் பார்த்துள்ளனர். படத்தை பார்க்க பார்க்க அமேசான் தளத்திற்கு வருவாய் கிடைக்கப் போகிறது. இவ்வளவு பணம் நடமாடும் இடத்தில் ஒரு தகுதிவாய்ந்த நிறுவனத்தையோ, தகுதி வாய்ந்த நபரையோ வைத்து டப்பிங் செய்திருந்தால் க்ளாடியேட்டர் -2 படத்தை முழுமையாக பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.
 

இதையும் படிங்க: குல்லா போடும் ஆள் நான் இல்லை… விஜய்யை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share