நடிகர் தனுஷ் இயக்கத்தில்.. கோல்டன் ஸ்பேரோவின் சாதனை
பிப்ரவரி 21 ரிலீஸ் ஆகற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம்
நடிகர் தனுஷ் இயக்கத்துல, பிப்ரவரி 21 ரிலீஸ் ஆக இருக்கிற திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இந்த படத்துல தனுஷுடைய அக்கா மகன் பவிஷ் ஹீரோவா நடிக்க, அனிதா சுரேந்திரன் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. லவ்வுக்கும் - லவ் ஃபெயிலியருக்கும் நடுவுல சிக்கிக்கிட்டு ஹீரோ எப்படி தவிக்கிறார் அப்படினு ஒரு அழகான 2-K லவ் ஸ்டோரி தான் தனுஷ் எமோஷன், காமெடியோட இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: வாடிவாசல் திரைப்படம் குறித்த அட்டகாச அப்டேட்....
இந்த படத்தோட ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைச்ச நிலையில, இப்போ கோல்டன் ஸ்பேரோ பாடல் ஓவர் புது சாதனை படைச்சிருக்குற தகவல் வெளியாகி இருக்கு.
அதாவது இதுவரைக்கும் இந்த பாடல் 150 மில்லியன் பார்வைகளை கடந்து இருக்கறதா படக்குழு அறிவிச்சிருக்காங்க. இந்த பாட்டுல நடிகை பிரியங்கா மோகன் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் ல டான்ஸ் பண்ணி இருக்காங்க.
இதையும் படிங்க: எது பண்ணாலும்... விமானத்தில் இருந்தபடி ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்..