×
 

முதலிரவில் ஷாக் கொடுத்த மனைவி… ஆபத்தான நிலையில் கணவன்!!

திருமணமாகி முதலிரவுக்கு சென்ற கணவனுக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி மணமகனின் தந்தை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி முதலிரவுக்கு சென்ற கணவனுக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி மணமகனின் தந்தை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதை வாங்கி படித்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்படி என்ன அந்த மனுவில் இருந்தது என்ற கேள்விக்கு சுந்தரமூர்த்தி அளித்த பதில் அதிர்ச்சியை கொடுத்தது. 

ஆசையுடன் திருமணம் செய்து வைத்த தனது மகன் நிலை குறித்து சுந்தரமூர்த்தி கண்ணீருடன் அளித்த புகார் மனுவில், “ என் மகன் கார்த்திக். அவருக்கும், சாந்தினி என்ற பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 26ம் தேதி திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் இருந்து மணப்பெண்ணான சாந்தினிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கவில்லை. அவரது குடும்பத்தினரும் மறைத்துள்ளது. 

இதையும் படிங்க: முதல் இரவுக்கு முன் மாமியார் செய்த கொடூர செயல்..! கன்னித்தன்மை பரிசோதித்த மாமியாருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

சாந்தினி வேறொரு நபரை காதலிப்பதால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.  திருமணமானதும் முதலிரவுக்கு சென்ற எனது மகனிடம், தனக்கு வேறொருவரை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் வேதனையடைந்த என் மகன், தனது மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். 
ஆனால், திருமணமானதால் மகள் வாழா வெட்டியாகிட கூடாது என்ற பெண்ணின் உறவினர்கள் எங்களை சமாதானம் செய்தும் எல்லாம் கொஞ்சம் நாளில் சரியாகி விடும் என கூறி சாந்தினியை மீண்டும் கார்த்திக் உடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தான் சாந்தினி அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி சாந்தினி குளிர்பானத்தில்வ் இஷம் கலந்து என் மகன் கார்த்திக்கு கொடுத்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மகனுக்கு புதுச்சேரில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என் மகனை உயிரை எடுக்க பார்த்த சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட புதுச்சத்திரம் போலீசார், இரு தரப்பு வீட்டாரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஒரு நாள் சுற்றுப்பயணம்.. ஆணை வெளியிட்ட தமிழக சுற்றுலாக் கழகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share