×
 

முதல் சிம்பொனி அரங்கேற்றம்... இசைஞானி இளையராஜா இமாலய சாதனை!!

ஆசியாவிலேயே யாரும் செய்ய முடியாத உலகமே வியந்து பார்க்கும் இமாலய சாதனையை இசைஞானி இளையராஜா செய்துள்ளார்.

இன்று இரவு லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கில் உலகமே வியந்து பார்க்க கூடிய தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்துள்ளார். வேலியன்ட் என பெயரிட்டுள்ள இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்கின்றனர்.

உலகின் தலை சிறந்த இசைக்கலைஞர்களான டேவிட் போபி மற்றும் அடிலி சிம்பொனியை இசைத்த அதே அரங்கத்தில் இன்றி இளையராஜா தமிழில் தனது அரங்கேற்றதை செய்வது தமிழர்களுக்கு பெருமையானது. முதலில் சிம்பொனி என்றால் என்ன அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளில் சிம்பொனி என்பது சுமார் 30-100 இசைக்கலைஞர்கள் ஒன்றி சேர்ந்து பல்வேறு இசைக்கருவிகளை வைத்து இசையை இசைப்பது.

இந்த சிம்பொனி நிகழ்வுகால் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமானது. இதுவரை வெளிநாடுகளில் இது போன்ற ஒரு இசை நிகழ்வை யாரும் செய்ததில்லை. இப்படி ஒரு சாதனையை தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பிறந்த இளையராஜா செய்துள்ளார்.

இளையராஜாவுக்கு சிம்பொனியை அரங்கேற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து இசையை அரங்கேற்ற நினைத்தார். இதை 1986, 1988 ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பாக வாசித்தும் அதை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து 2005ம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார். எனினும் இளையராஜாவுக்கு சிம்பொனி மீதே அதிக ஆர்வம் இருந்தது. சிம்பொனியை அவ்வளவு சாதாரணமாக யாராலும் நிகழ்த்திட முடியாது. சிம்லொனியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுக்க வேண்டும். இசையின் மீதான தீரா காதல் இளையராஜாவால் இதை செய்து முடிக்க முடிந்தது. தனது கனவான சிம்பொனியை இன்று முதல் தமிழராக, இந்தியராக, ஆசிய இசையமைப்பாளராக நிகழ்த்தியுள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி போன்ற உலக இசை ஜாம்பவான்களில் வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றுகிறார். 

இதையும் படிங்க: லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என பேட்டி..!

1943 ம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற குக் கிராமத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். ஹார்மோனியம் மூலம் இசைக்க கத்துக் கொண்டார். பின்னர் 21வது வயதில் பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்தார். 

சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்கத்தல் மேற்கத்திய இசையை கற்ற இவவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இளையராஜா சிம்பொனியை உருவாக்கியுள்ளார்.

கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையை கலந்து "இளைய நிலா", "ராஜ ராஜ சோழன்" பாடல்களை உருவாக்கினார். இது இசைஞானி இளையராஜாவுக்கு மற்றுமொரு மணிமகுடமானது.  கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் ஒன்றாக கலந்து ரசிகர்களை கிரங்கடிப்பதில் இளையராஜாவுக்கு நிகர் அவரே. 81 வயதிலும் இசையில் அசாத்தியத்தை நிகழ்த்தி வரும் இளையராஜா சிம்பொனி இசை மூலம் மற்றொரு மணிமகுடத்தை அடைந்துள்ளார். 60 ஆண்டுகளாக அன்னகிளி முதல் விடுதலை 2 வரை ரசிகர்களின் பல்ஸ் பார்த்து இசையில் சாதனைகளை படைத்து வரும் இளையராகா மேஸ்ட்ரோ தான்..

இதையும் படிங்க: லண்டன் புறப்பட்டார் இளையராஜா.. Incredible India மாதிரி நான் Incredible Ilayaraja என பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share