என்றும் அன்புடன் நட்சத்திரன்..! ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்..!
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா - கார்த்திக் தம்பதியின் மகனுக்கு நட்சத்திரன் உலக நாயகன் கமல்ஹாசன் பெயரிட்டுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பவிரு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். கலக்கப்போவது யார் என்று நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் ரோபோ சங்கர். தீபாவளி, ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, கப்பல், என எண்ணற்ற படங்களின் நடித்துள்ளார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கரும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.
இவர்களது மகள் தான் இந்திரஜா. இவர் 2019 ஆம் ஆண்டு பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கால்பந்து வீராங்கனை வேடத்தில் அறிமுகமானார்.அதன் பிறகு பாகல் என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஸ்வக் சென்னின் காதலர்களில் ஒருவராக நடித்தார். மேலும், ஈ சிங்கிள் சின்னோடு பாடலில் நடித்துள்ளார் இந்திரஜா. மேலும், 2022 ஆம் ஆண்டு விருமன் படத்திலும் நடித்த இவர், கார்த்திக் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க: அட இப்படியுமா..? ஷார்ட் சர்வீஸ்... பாலியல் தொழிலில் புதிய யுக்தி… ஸ்பாட்டில் சிக்கிய 23 பெண்கள்..!
திருமணத்திற்குப் பிறகு இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாகக் கலந்து கொண்ட நிலையில், இந்திராஜா கர்ப்பமானதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.
இவர்களுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்திரஜா - கார்த்திக்கின் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் நட்சத்திரன் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திரஜா- கார்த்திக் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த பதிவில், தங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான தங்கள் மகனுக்கு...உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் நட்சத்திரன் என பெயரிட்டு வாழ்த்தியாக கூறியுள்ளனர்.என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்.. என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கூடுதல் சம்பளம் தரும் டொனால்ட் டிரம்ப்? சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு எவ்வளவு கிடைக்கும்?