பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!
முன்பு கலைஞரா? - ஜெயலலிதாவா? என்று பார்த்தார்கள். இப்போதும் ஸ்டாலினா - எடப்படியா? என்றுதான் பார்ப்பார்கள்.
''எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார்'' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதற்கு தேமுதிக-வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே துவரிமான் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திமுக எத்தனை கட்சியோடு கூட்டணி வைத்தாலும் மக்கள் ஓட்டுப்போட தயாராக இல்லை.மக்கள் எப்போதும் அதிமுக - திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையைத்தான் விரும்புவார்கள். முன்பு கலைஞரா? - ஜெயலலிதாவா? என்று பார்த்தார்கள்.
இப்போதும் ஸ்டாலினா - எடப்படியா? என்றுதான் பார்ப்பார்கள். அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் திமுக வுக்கு எதிராக உள்ளார்கள்2026 தேர்தலில் திமுக குடும்பத்தை தவிர மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை.ஏனென்றால் திமுக குடும்பம்தான் எல்லாமே அனுபவிக்கிறது. திமுக குடும்பத்திலேயே 'பவர் பாலிடிக்ஸ்' உள்ளது. திமுகவில் கனிமொழிக்கே முக்கியத்துவம் கிடையாது. நிகழ்ச்சிகளில் பூஜை போடும் போது மட்டும் அழைக்கிறார்களே தவிர கண்டுகொள்ளவில்லை.
இதையும் படிங்க: விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?
எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார். அதற்கு உதாரணம் பாமக. இன்று அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு காரணம் எடப்படியார்தான். ஆனால், அன்புமணி ராமதாஸ் பதவி வாங்கியவுடன் எங்களை மறந்துவிட்டு ஆளுங்கட்சிக்கு தாவிவிட்டர். இருந்தாலும் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றினார். எங்கள் தோழமை கட்சிகளை எப்படி அரவணைப்பது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும்.
கற்பனை கதாநாயகனாக ஊடகங்கள் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அப்போது அதிமுக ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு எடுத்து அறிவிப்பார். பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு அது அப்போதுதான் தெரிய வரும். சூழ்நிலை அறிந்து பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார். நாளைக்கு இறந்திடுவோம் என்று இன்றைக்கு சுடுகாட்டுக்கு சென்று படுக்கமுடியாது, காலம் உள்ளது.
சாட்டையை சுழற்றுவேன், சாட்டையை சுழற்றுவேன் என்று சொல்லிவிட்டு சர்வாதிகாரமாக முதலமைச்சர் நடந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் விவரமானவர்.தென் மாவட்டத்தில் வரப்பிரசாதமாக உள்ள கலைஞர் நூலகத்தில் இப்போது யாரும் வருவதில்லை என்று கூறி சினிமா படம் திரையிட போவதாக சொல்கிறார்கள்.கலைஞர் நூலகத்திற்கு 'கலைஞர்' என்று பெயர் வைத்ததால் குளு குளு வென நூலகத்திற்கு வெயில் காலத்தில் கூட யாரும் வருவதில்லை.
அமைச்சர் மூர்த்தியைப் பார்த்து பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை. நான் மக்களை சந்திப்பவன் அல்ல. மக்களோடு மக்களாக இருப்பவன். அமைச்சர் மூர்த்தியை அவரது கிழக்கு தொகுதியை தக்க வைக்கச் சொல்லுங்கள். மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக தான் வெற்றி பெறும்" என்றார்.
''எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார். அதற்கு உதாரணம் பாமக. இன்று அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு காரணம் எடப்படியார்தான்'' என எடப்பாடியாரின் வாக்குறுதி குறித்து செல்லூர் ராஜூ பேசியதற்கு தேமுதிகவினர், ''எடப்பாடியார் சொன்ன வாக்கை காப்பாற்றுபவரா? தோழமை கட்சிகளை அரவணைத்துச் செல்பவரா..?
பாமகவுக்கு கொடுத்த வாக்குறுதியைப்போல இந்த முறை எங்கள் கட்சிக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக கூட்டணி அமைக்கும்போது வாக்குறிதி கொடுத்து இருந்தாரே… அது என்னவாயிற்று. இப்போது நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று பல்டி அடிக்கிறாரே..? இதுதான் அவர் வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணமா? எடப்பாடியாரை எம்.ஜி.ஆருடன் எல்லாம் ஒப்பிட்டு பேசாதீர்கள் செல்லூர் ராஜூ'' அவர்களே எனக் கொந்தளிக்கிறார்கள்.
இதையும் படிங்க: டிவி பெட்டியை உடைத்துவிட்டு ஊழலுக்கு டப்பிங் கொடுக்கிறார்... கமலை தாறுமாறாக விமர்சித்த விஜய் கட்சி.!