×
 

ரசிகர்களே கவனமாக இருங்கள்... கமலிடம் இருந்து வெளியான எச்சரிக்கை!!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா துறையில் சமீப காலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுவது தொடங்கி தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை பயன்படுத்து பண மோசடி செய்வதை வரை என மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவன பெயரில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது தயாரிப்பில் விருமாண்டி, மகளிர் மட்டும், சத்யா, அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, குருதிப்புனல் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியாகி மெகா ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது. இந்த படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிக்கும் தக்லைஃப் படத்தையும் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!

இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எந்த வகையிலும் உங்களை வந்தடைந்தால் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி மோசடியில் தமன்னாவுக்கு தொடர்பா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share